crest

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்

The Official Website of the Royal Family of Jaffna (Sri Lanka)

යාපනය රාජකීය පෙළපතේ නිල වෙබ් අඩවිය

King Statue

வாழ்க்கை சரிதை

H.R.H. Raja Remigius Kanagarajah கனத்துக்குரிய சிங்கை ஆரியன் சேதுக்காவலன் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் காலம் சென்ற இளவரசி மகேஸ்வரி கனகராஜா மற்றும் காலம் சென்ற இளவரசன் தம்பிராஜா கனகராஜா ஆகியோரின் இறுதிப்புதல்வன் ஆவார். இவர் 1964ம் ஆண்டு ஐப்பசி மாதம் 1ம் திகதி இலங்கையில் பிறந்தார். இவரது மூதாதையர்கள் இலங்கை மற்றும் இந்தியாவை அடியாகக் கொண்டிருந்தாலும் இவர் இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளிலும் வாழ்ந்துள்ளார். இவரது குடும்பத்தில் உள்ள 5 பிள்ளைகளில் இவரே கடைசிப் புதல்வரும் ஆவார். எனினும் யாழ் அரச பரம்பரையை சேர்ந்த இவர், அரச பரம்பரைக்குரிய கட்டுப்பாட்டிற்கேற்பவே சிறுவயது முதல் வளர்க்கப்பட்டு வந்துள்ளார். ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் யாழ்ப்பாண அரச குடும்பத்தின் நேரடி வாரிசு ஆவார். யாழில் அரசபரம்பரைக்குரிய நல்லூர் இராஜதானியின் சங்கிலித்தோப்பு, அரச அரண்மனைக்கு உரிமை உள்ள குடும்பத்தின் வாரிசு இவர் ஆவார்.

ஆரியச்சக்கரவர்த்தி மற்றும் யாழ்ப்பாண அரசர்கள் யாழ்ப்பாணத்தை பல ஆண்டுகளாக ஆண்டுவந்துள்ளனர். சுமார் 404 வருடங்களுக்கு மேலாக செழிப்பானதொரு ராஜதானியாக இது விளங்கியுள்ளது. இருந்தபோதும் துரதிஸ்ட வசமாக இது போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டது. பின் வந்த காலங்களில் இலங்கை தீவின் காலனித்துவமாக இருந்த கிழக்குப் பகுதிக்கு, யாழ்ப்பாணம் மாநிலமாக மாறியது. 1621 மாசி 11ம் திகதி ஆரியச்சக்கரவர்த்தி வீழச்சி கண்டது. அரச குடும்பத்தினர் அனைவரும் கொழும்பு மற்றும் கோவாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு கத்தோலிக்க மதமாற்றத்தின் மூலம் வாழ வழிவகுக்கப்பட்டது. மதம் மாற மறுத்தவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். தேவாலய நடைமுறைக்கு உட்பட்டவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டனர். சிலர் தேவாலய மடங்களில் துறவியாக சேர்ந்தார்கள். 1948ம் ஆண்டு மாசி 4ம் திகதி இலங்கை பிரித்தானியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது . அதனைத் தொடர்ந்து 1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி இலங்கை மேலாட்சி பிரித்தானிய பொதுநல வாயத்தின் கீழ் குடியரசாக அறிவிக்கப்பட்டு 157 வருட ஆங்கிலேய முடியாட்சியானது முடிவுக்கு வந்தது.

உலகின் தொன்மைமிக்க மத நம்பிக்கையாகத் திகழும் சைவ சமயமானது யாழ்ப்பாண இராச்சியத்தின் அதிகாரப்பூர்வமான சமயமாகும். சிங்கை ஆரியன் சேதுகாவலன் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்களின் மூதாதையர் காலனித்துவ காலத்தில் காலனித்துவ ஆட்சியாளர்களினால் நடாத்தப்பட்ட மதம் மாற்றும் பணிகளுக்கு எதிராக போராடி அதன் மூலமாக யாழ்ப்பாண இராச்சியத்தின் சுதந்திரத்தை பாதுகாத்தனர். இன்றும் இலங்கையில் தமிழ் மக்கள் பரவலாக கடைப்பிடிக்கும் ஆதிக்க மதமாக சைவ சமயம் உள்ளது. இருப்பினும், ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் மதிப்பளித்துவருகின்றார்.

இதே வேளை மதிப்பிற்குரிய ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் கத்தோலிக்கத்தில் திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவராக இருந்த போதும் பல சைவ, சமய நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு வருகின்றார். அத்துடன் அனைத்து விடையங்களிலும் இவர் தமது மூதாதையரின் கலாசாரம் பாரம்பரியங்களைப் பின்பற்றிய வண்ணமே உள்ளார். எனினும் தனிப்பட்ட முறையில் இவர் சில விடையங்களை செய்ய முற்பட்டாலும் பாரம்பரியங்களை விட்டு விலகாமலேயே செயற்படுகின்றார்.

இளம்பராயத்திலிருந்து இவருடைய பெற்றோர் நேர முகாமைத்துவத்துடன் இவர் செயற்படுவதற்கு வழிவகுத்தனர். சிறு வயதுடையவராக இருந்தபோதும் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்களுடனான தொடர்பு மற்றும் சமூகத்தின் மீதான அக்கறை என்பன இவரை நேர் வழியில் இட்டுச் சென்றன.

கல்வி

கனத்துக்குரிய சிங்கை ஆரியன் சேதுக்காவலன் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் ஆரம்பத்தில் அனுருத்த கல்லூரி (Anuruddha College) மற்றும் இளவரசர் வேல்ஸ் கல்லூரி (Prince of Wales College) ஆகியவற்றிலும் பின்னர் கொழும்பில் உள்ள அலீத்தியா (Alethea International) எனும் தனியார் சர்வதேச பாடசாலையிலும் கல்வியைக் கற்றுக்கொண்டார். அத்தோடு அலீத்தியா சர்வதேச பாடசாலையில் அவர் பலதரப்பட்ட விளையாட்டு செயற்பாடுகளிலும் பங்குபற்றினார். அவரது கல்லூரி படிப்பின் கடைசி வருடங்களில் அவர் அக்கல்லூரியின் முன்னணி மாணவராக திகழ்ந்ததுடன் அவர் அக் கல்லூரியின் விளையாட்டு இல்ல தலைவராகவும் தலைமை மாணவர் தலைவராகவும் செயற்பட்டார்.

வணிகப்பின்னனி

கனத்துக்குரிய சிங்கை ஆரியன் சேதுக்காவலன் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபின் அலீத்தியா (Alethea International School) பாடசாலையிலேயே கண்டிப்பு மிக்க ஆசிரியராக கடமையுணர்வுடன் பணியாற்றியுள்ளார். இத்துடன் திறனான போக்குவரத்து முகாமைத்துவக் கம்பனிகளிலும் பொது முகாமையாளராக பணியாற்றியுள்ளார். சிறுவயதுமுதல் மனித நேயச் செயற்பாடுகளிலும் இவர் ஆர்வம் காட்டியதுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திலும் அங்கத்தவராக இருந்துள்ளார்.

சிங்கை ஆரியன் சேதுகாவலன் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் எப்போதும் தேவையுள்ளோர்க்கு உதவிடவும், மனிதாபிமானச் சேவைகளைச் செய்வதற்குமான பல சேவைகளில் ஈடுபடவும் ஆர்வமாக இருந்தார். அவரது பாரம்பரிய மற்றும் கண்டிப்புமிக்க வளர்ப்பின் காரணமாக, ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்களுக்கு சமுதாயத்துடன் அல்லது பொதுமக்களுடன் தொடர்பு கொள்வதற்கு எவ்வித வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பல சிரமங்களுக்கு மத்தியிலும், ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் 1986 இல் செஞ்சிலுவைச் சங்கத்தில் சேர்ந்தார். அதன் பின்னர் அவர் வாழ்க்கையில் பலவிடயங்கள் மாறத்தொடங்கின. 1987 ஆம் ஆண்டில் இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் விளைவாக யுத்த காலத்தில் ராஜாரெமிகியஸ் கனகராஜா அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணிபுரியும் வாய்ப்பைபெற்றார்.

1987ல் இந்திய, இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கீழ் செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழப்பாண பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இலங்கை, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் வடக்கு, கிழக்கு இணைப்பாளராகப் பணிபுரிந்தார். செஞ்சிலுவைச் சங்கத்தில் பணிபுரிந்த காலத்தில் உள்நாட்டு யுத்தப்பிரதேசங்களில் சிரமங்களுக்கு மத்தியில் முன்னிலையில் நின்று பணியாற்றினார். அதாவது யாழ்ப்பாணத்தில் யுத்தத்தின் போது காணாமற் போன நபர்களை கண்டுபிடிப்பது, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் ஆடைகளை விநியோகிப்பது, மருத்துவ உதவி, வாகனம் மூலம் மருத்துவ சிகிச்சைகள் வழங்குதல், சிறைக் கைதிகளை சந்தித்தல் போன்ற பல வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.

ராஜா அவர்கள் பாராமருத்துவத்தில் தகமைவாய்தவர் ஆவார். தமக்கிருந்த பல வேலைகள் மத்தியிலும் நோய்வாய்பட்டவர்களையும் காயமுற்றவர்களையும் மருத்துவமனையில் நடை பயிற்சிக்கு அiழைத்துச் செல்லும் அணியிலும் நோயாளிகளை சந்தித்து விசாரிக்கும் அணியிலும் பங்குவகித்தார். ராஜா ரெமிஜயஸ் கனகராஜா அவர்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு பிரதிநிதிகளை சந்தித்து இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணப்படும் வன்முறைகளைக் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஊழல் உலகில் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. இவர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் யாழ் மாவட்டத்தில் ஊழல் உச்ச நிலையில் காணப்பட்டது. இதனை பலரின் உதவியுடனும் இவர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலங்களில் அச்சுறுத்தல் காரணமாக இவருக்கு உயிருக்கு ஆபத்து இருந்தது. எனிலும் தம் சேவையை அவர் நிறுத்திவிடாது மக்களுக்காக அதை தொடர்ந்தும் பணியாற்றினார். மூன்று தடவைகள் இவருக்கு கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனிலும் இவைகள் யாவும் சித்திபெறாது ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் மயிர்இழையில் யுத்தத்தின் போது உயிர் தப்பினார். எல்லா அச்சுறுத்தல்கள் மற்றும் கஷ்டங்கள் மத்தியிலும் ராஜா தனது சேவைகளை மக்களுக்காக முழுமூச்சுடன் செய்தார். யாழ்ப்பாண குடாநாட்டில் இவரது சேவைகளை மக்களால் மிகவும் பாராட்டப்பட்டது.

கனத்துக்குரிய சிங்கை ஆரியன் சேதுக்காவலன் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் 1991 ல் இருந்து நெதர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். ராஜா அவர்கள் தனது சொந்த நாட்டில் வசிக்காது வெளிதேசத்தில் வாழ்ந்தாலும் தினமும் இலங்கையில் நடந்து வரும் நிலைமைகளை அவதானித்து வருகின்றார். சிதறிய இலங்கை தமிழ் மக்கள் சமாதானத்தை அடைவதற்கு தம்மால் ஆன உதவிகள், பணிகளை செய்வதே அவரது முக்கிய ஆவலாகும். 30 வருடங்கள் நிறைந்த யுத்தத்திற்கு பின்பு நிலையான ஒரு சமாதான நிலைமையை மக்கள் பெறுவதற்கு மக்களின் நீடிய பொறுமை அவசியம். பிறரை புரிந்துகொள்ளும் மனநிலைமையிலும் மற்றும் ஒன்றிணைந்து செயற்படும் மனநிலைமையிலும் மாத்திரமே நிரந்தரமான சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் இவர் அம்னீஸ்ரி (Amnesty International) என்னும் சர்வதேச அமைப்புடன் இணைந்து செற்பட்டு வருகின்றார். அத்துடன் குரூஸ் சிப் ஜேகென்றி டோனெட் (Cruise Ship J. Henry Dunant) என்னும் நெதர்லாந்து அமைப்புடனும் தொண்டாற்றி உதவிகள் இல்லாது வாழ்வதற்கு போராடும் அனேகருக்கு ராஜா ரெமிஜியஸ் அவர்கள் நிதி உதவிகள் வழங்கியுள்ளார். ராஜா ரெமிஜியஸ் அவர்கள் ஊணமுற்ற சிறியோர் மற்றும் பெரியோர்களுக்கும் தமது உதவிகளை வழங்கியுள்ளார். அதாவது மன அழுத்தமுள்ள, அன்பற்ற இன்றைய சமூகங்கள் மத்தியில் மற்றும் கவனிப்பின்றி பிற வேலைகளில் மூழ்கியிருக்கும் மக்கள் மத்தியிலும் இவர்கள் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி பயனுள்ள வாழ்க்கை வாழ முடியும் என்பதை அவர்களுக்கு ஆலோசனை வழங்கி மற்றும் பயிற்சி கொடுத்தும் உதவியுள்ளார். ராஜா அவர்கள் பல்வேறு சமூக மற்றும் உளவியல் பிரச்சினைகள் கொண்ட மக்களுக்கும், குறிப்பாக திருமண பிரச்சினைகள் மற்றுமாக தமக்கென்று ஓர் அடையாளம் தேடி ஏங்கும் இளைஞர்களுக்கும் அவர் உதவியுள்ளார். மக்களுடன் சுமூகமாக பழகும் தகமையான பழக்கத்தினையும் அனுபவங்களையும் ராஜா அவர்கள் தாம் சந்தித்த அநேக மக்கள் ஊடாகவும் குறிப்பாக இலங்கை ஊடாகவும் பெற்றிருக்கின்றார்.

ஆரியச்சக்கரவர்த்தி இராச்சியத்தை மீளக்கட்டி எழுப்புதல்

2003 ல் கனத்துக்குரிய சிங்கை ஆரியன் சேதுக்காவலன் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தின் மரபுகள், பாரம்பரியங்கள் அனைத்தும் குடும்பத்தினரின் ஆதரவு மற்றும் அனுமதியுடன் நடைமுறைக்கு உட்படுத்தப்பண்ணினார். 2005 யூன் 15 ல் சிங்கை ஆரியன் சேதுக்காவலன் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் அனைத்து யாழ்ப்பாண அரச குடும்பத்தினரின் பெரும் வரவேற்பிற்கிணங்க, அரச சடங்குகளுடன் அரச குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அரச கடமைகள்: அனைத்து அரச நிகழ்வுகளுக்கும் பங்கு பற்றல், சமூக சேவைப் பணிகள், மக்கள் நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள் போன்றவற்றிற்கு நெதர்லாந்திலும் ஏனைய நாடுகளுக்கும் சமூகமளித்தல். இவ் கடமைகள் மட்டுமல்லாது இலங்கை மக்கள் அனைவருக்கும் சமாதானத்தை நிலவ செய்வதே ராஜா அவர்களின் முக்கிய நோக்கமாய் உள்ளது.

சிங்கை ஆரியன் சேதுகாவலன் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள், எவ்வித அரசியல் கட்சியையும் சாந்தவர் அல்ல. மேலும் அவர் எத்தகைய அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவு தெரிவிக்கின்றவரும் இல்லை. எனிலும் ராஜா ரெமிஜியஸ் கனகராஜாவின் மாபெரும் நம்பிக்கையானது, சிதறடிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு சமாதானத்தை ஏற்படுத்தவும், இரு இன மக்கள் மத்தியில் நம்பிக்கை எனும் பாலத்தை கட்டியெழுப்பச் செய்து அவர்களை ஒரு நாட்டு மக்களாக ஒன்றிணைக்கச் செய்வதாகும்.

### ஏகாதிபத்திய கூட்டுறவு ###

கனத்துக்குரிய சிங்கை ஆரியன் சேதுக்காவலன் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் லண்டனில் உள்ள ஏகாதி பத்திய கூட்டுறவு அமைப்பொன்றின் (International Monarchist League) அங்கத்தவராவார். அரச பரம்பரைகளுக்கிடையிலான நட்புறவைப் பேணும் தென்கிழக்காசிய இம்பீரியல் மற்றும் ரோயல் கூட்டுறவு அமைப்பிலும் (Southeast Asia Imperial and Royal League) அங்கத்தவராக உள்ளார். இந்த அமைப்பு "ராஜதந்திர மட்டத்தில்" நட்புறவை பேணுவதுடன் மட்டுமல்லாது அரசியல், சமூக நிதி சார் பிரச்சினைகளிற்கும் தீர்வுகளையும் வழங்குகின்றது.

பல்வேறுபட்ட அரசியல் தலைவர்கள் தேசிய நிறுவனங்கள் அரச குடும்பங்கள் போன்றவற்றுடன் ராஜா நல்லுறவைப் பேணி வருவதுடன் பல்வேறு நிகழ்வுகளில் இலங்கை மற்றும் வெறிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டி அளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

கனத்துக்குரிய மகாராஜா ராஜா ரெமிஜியஸ் கனகராஜாஅவர்கள் சுற்றுலா செல்வது, புத்தகங்கள் வாசித்தல், குதிரைச்சவாரி, உடற்பயிற்சி, சீராக ஓடல், நீச்சல், ரென்னிஸ் மற்றும்பூப்பந்து ஆகியவற்றை பொழுதுபோக்காக கொண்டுள்ளார். மேலும் நடைபயணம் என்பது அவருக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல் இசை, புகைப்படம் எடுத்தல், புராதனபொருட்கள் சேகரித்தல், நவீன தொழிநுட்பங்களைஅறிந்துகொள்ளுதல், உலக வரலாற்றில் ஈடுபாடுபோன்றவற்றினையும் தனது பொழுது போக்காககொண்டுள்ளார்.

கனத்துக்குரிய மகாராஜா ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்களும் செல்வி ஐஸ்வரி ராஜ்நந்தினி லூசிஜா ராஜரத்னம் அவர்களும் ஆறுவருட அறிமுகத்துக்கு பின்பாக திருமணம் செய்து கொண்டனர். அவர்களது அரசாங்க பூர்வமான பதிவுத் திருமணமானது 2002 ஆம் ஆண்டு லண்டனில் Royal Borough of Kensington & Chelsea இல் நடைபெற்று பின்பாக திருச்சபை திருமண ஆசீர்வாதமானது 02 ஐப்பசி 2004 ஆம் ஆண்டு ஸ்கொட்லண்ட் இல் உள்ள Balfour Castle, Shapinsay in Orkney, Scotland இல் நடைபெற்றது. இருவரின் பரஸ்பர சம்பந்தத்தின் அடிப்படையில் இத் தம்பதியினர் 2006 ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக பிரிவதற்கு முடிவுசெய்தனர்.

கனத்துக்குரிய மகாராஜா ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் 2009 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் பிபிசி (BBC) தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய Undercover Princes எனும் நிகழ்ச்சியில் பங்குபற்றியுள்ளார். அதே வருடம் நெதர்லாந்தில் உள்ள தொலைக்காட்சியான எஸ்பிஎஸ் 6 (SBS6) தொலைக்காட்சி ஒளிபரப்பில் Coming to Holland (Prins Zoekt Vrouw) எனும் நிகழ்ச்சியிலும் பங்குபற்றியுள்ளார். மேலுமாக ஐக்கிய இராச்சியத்தின் ஐரிவி 1 (ITV1) எனும் தொலைக்காட்சியிலும் ஆனி 2011 ஆம் ஆண்டு Odd One எனும் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார்.

An Expert View

Eye-Features

கௌரவிப்புக்கள்:

  • Flag of Ethiopia, source Wikimedia CommonsETHIOPIA: The Imperial Ethiopian Order of Saint Mary of Zion (GCMZ) - Grand Collar
  • Flag of Portugal, source Wikimedia CommonsPORTUGAL: The Royal Order of St. Michael of the Wing - Grand Cross
  • Flag of Spain, source Wikimedia CommonsSPAIN: The International Order of the Academic Sciences (OMMA) - Grand Commander

விருதுகள்:

  • Flag of Germany, source Wikimedia CommonsGERMANY: International Federation Cuisiner Exclusive D’ Europe (FCEE) – Honorary Certificate and a Medal
  • Flag of Spain, source Wikimedia CommonsSPAIN: World Organization of Alternative Medicines (OMMA) - Grand D. Sc
  • Flag of Thailand, source Wikimedia CommonsTHAILAND: The Diamond Jubilee Medal of His Majesty The King Bhumibol Adulyadej
  • Flag of Uganda, source Wikimedia CommonsUGANDA: Association of the Representatives of the Kingdom Bunyoro-Kitara, worldwide (ARKBK) - Honorary Member
  • Flag of United Kingdom, source Wikimedia CommonsUNITED KINGDOM: Certificate of Recognition from the Mayor of London Borough of Harrow

ஆதரவாளர்:

கனத்துக்குரிய சிங்கை ஆரியன் சேதுக்காவலன் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் கீழ்வரும் நிறுவனங்களுக்கு ஆதரவாளராக உள்ளார்.

  • நெதர்லாந்து செஞ்சிலுவை சங்கம்.
  • The Independent Overseas Command of the Legion of Frontiersmen.

மொழியாற்றல்:

கனத்துக்குரிய சிங்கை ஆரியன் சேதுக்காவலன் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் அவர்களுடைய தாய் மொழியாக தமிழ் காணப்பட்டாலும் ஆங்கிலம், சிங்களம், டச்சு ஆகிய மொழிகளிலும் பாண்டித்தியம் உடையவராக உள்ளார்.