தற்போதைய அரச குடும்பம்
ஆரியச்சக்கரவர்த்தியின் வம்சாவளி
சிங்கை பரராசசேகரன் (1478-1519) + மங்கத்தம்மாள்
|
சங்கிலி ராஐா (I) செகராசசேகரன் (1519-1565)
|
பெரிய பிள்ளை பண்டாரம் செகராசசேகரன் (1570-1582)
|
இளவரசன் காகோ பண்டாரம்
|
சங்கிலி (II) செகராசசேகரன் (1616-1620)
ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் தோற்றக்காரணர்
இலங்கையில், தனித்துவமான தமிழ் இராஜ்ஜியமானது மீண்டும் பதின்மூன்றாம் நூற்றாண்டில் நிலைநாட்டப்பட்டது. இதுவே யாழ்ப்பாண வரலாற்றில் குறிப்பிடத்தக்க காலமாகும். வட இலங்கையில் மாறவர்மன் குலசேகரனின் ஆட்சியில், பாண்டிய அரசின் மதிப்புமிக்க பிரபுவாகிய ஆரிய சக்கரவர்த்தி பெரும் பலமும் அதிகாரமும் பெற்றிருந்தார். ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தினை தோற்றுவித்த பெருமை இத்தகைய மதிப்பும் பலமும் பொருந்திய சக்கரவத்தி நல்லூர் செவ்ஙிருக்கை நாட்டை சேர்ந்த ஆரியச்சக்கரவர்த்தியயே சாரும். நான்கு வேதங்களில் நிபுணத்துவம் பெற்ற காசியப்ப கோத்திரத்தின் பிராமண தளபதி கோத்திரத்தில் வழிவந்த அரச பிரபுக்கள் வம்ச வழி வந்தவரே சிங்கை ஆரியன் செகராசசேகரன் ஆவார். பாண்டியர்ககளுடைய கல்வெட்டுக்கள் மற்றும் குறிப்புக்களிலும் பாண்யர்களுக்கு கீழ் உயர்ந்த இராணுவ சேவையில் மிகவும் உயர்ந்த பதவிகளை கொண்டிருந்வர்களான செவ்விருக்கை நாட்டின் சக்கரவத்திகளின் வம்சாவளியைச் சேந்தவர்களே யாழ்ப்பாண மன்னர்கள் என உள்ளது. கடலோரப் பகுதியான தற்போதய ராமநாத பகுதியில் அமைந்துள்ள செவிற்கை நாட்டின் சக்கரவத்தி ஊரே ஆரியச்சக்கரவர்த்தி மற்றும் யாழ்ப்பாணஅரசர்களின் பூர்வீகமாகும்.
சங்கிலி (II) செகராசசேகரன் (1616-1620)
இளவரசன் சங்கிலி குமாரன் (Cankili Kumaran), இளவரசன் காகோ பண்டாரம் (Gago Pandaram) அவர்கட்கும் அரசன் சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி புவிராஜ பண்டாரத்தின் மகளுக்கும் (பெயர் அறியப்படவில்லை) பிறந்த இரட்டைப் புதல்வர்களுள் மூத்த புதல்வனாவார். இளவரசன் சங்கிலி குமாரன் மிகவும் அழகான தோற்றமுடையவராகவும் மிகவும் திறமைமிக்கவராகவும் காணப்பட்டார். இவர் அரசன் பெரியப்பிள்ள செகராசசேகரனதும் (1570-1582)அரசன் புவிராஜ பண்டாரம் பரராசசேகரனதும் (1561-1565 மற்றும் 1582-1591) பேரனும், அரசன் சங்கிலி ராஜா (I) செகராசசேகரனின் (1519-1565) கொள்ளுப்பேரனுமாவார்.
இளவரசன் அரசகேசரி பண்டாரம் தன் மருமகனாகிய மூன்று வயது நிரம்பிய பட்டத்து இளவரசன் டொம் கொன்ஸ்டண்டீனோ சிறுவனாக இருந்ததனால், அந்த பட்டத்து இளவரசனின் (Prince Regent) பொறுப்பை அவன் செய்து வந்தான். எனிலும் இந்த ராஜ்ஜியபாரமானது ஒரு சில காலங்களே நீடித்தது ஏனெனில் இந்த காலகட்டங்களில் பட்டத்து இளவரசன் பொறுப்பில் செயல்ப்பட்ட இளவரசன் அரசகேசரியை கொலைசெய்ய சதிதிட்டம் தீட்டப்பட்டது. 1616 ஆம் ஆண்டில் இளவரசன் சங்கிலி குமாரன் தன் சகாக்களை அரச மாளிகைக்கு அனுப்பி பட்டத்து இளவரசன் பொறுப்பில் செயற்பட்ட தன் மாமாவாகிய இளவரசன் அரசகேசரி, மற்றும் அவர்களோடு இருந்த அனைவரையும் கொலைசெய்யச் செய்தான். அதன் பின்பாக இளவரசன் சங்கிலி குமாரன் அங்கிருந்த பல இளவரசர்களையும் கொலை செய்து, தன் உறவினினராகிய (Cousin) டொம் கொன்ஸ்டண்டீனோவின் பட்டத்து அரியணையை கைப்பற்றினான். இளவரசன் சங்கிலி (II) சிம்மாசனப்பெயராக செகராஜசேகரன் என்னும் அரியணைப்பெயரை எடுத்து 1616 தொடக்கம் 1619 வரை அரசாண்டான்.
சங்கிலி (II) செகராஜசேகரனின் ஆட்சியிலே பல அமைதியின்மைகள் இருந்தன. அரசன் சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி எதிர்மன்னசிங்கம் பரராஜசேகரன் 1617 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மரித்தார். அவர் தம் சிறுவயது மகன் டொம் கொன்ஸ்டண்டீனோவை அடுத்த பட்டத்து அரச ஸ்தானத்தில் விட்டுச்சென்றார். இக்காலக்கட்டத்தில் அமைச்சரவை பல பிரிவுகளாக கருத்துமுரண்பாடு கொண்டு பல சார்பு பிரிவுகளாக பிரிந்தனர். ஒருசில கிறிஸ்தவ முதலியார்கள் இறந்த அரசனின் சிறு மகனை சார்ந்து கொண்டு போத்துக்கேயர் யாழ்ப்பாண அரசாட்சியையும் மரித்த அரசனின் மருமகனான சங்கிலி (II) செகராஜசேகரனின் ஆதரவாளர்களையும் கைப்பற்றவேண்டி விரும்பினார்கள், ஒருசிலர் சிறு வயது இளவரசனை சார்ந்து தாம் அந்த பதவியினை வகிக்க விரும்பினர், ஒருசிலர் வேறொரு பட்டத்துக்குறியவர்களை அமர்த்த விரும்பினார்கள். இப்படியாக தம்மை எதிர்த்து பிரிந்திருந்த மூன்று குழுக்களையும் சங்கிலி (II) செகராஜசேகரன் அடக்கி ராஜ்ஜியத்தை முழுமையாக தன்வசமாக்கி, யாழ்ப்பாண ராஜ்ஜயத்தை முழு அதிகாரத்தோடும் பெலத்தோடும் அரசாட்சி செய்தார்.
1619 ஆண்டில் போத்துக்கேயர் பிலிப் டூ ஒலீவேரியாவின் (Filipe de Oliveira) தலைமையின் கீழ் யாழ்ப்பாணத்தை கைப்பற்ற படையெடுத்தனர். மன்னன் சிங்கை ஆரியச்சக்ரவத்தி சங்கிலி (II) செகராஜசேகரன் யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னனாவார். சங்கிலி (II) செகராஜசேகரன் அஞ்சாத தைரியமிக்க அரசனாக போத்துக்கேயர்களை தன் இறுதி வரைக்கும் எதிர்த்தார். 1619 ஆண்டு ஜூன் மாத காலக்கட்டத்தில் போத்துக்கேய படைத்தளபதி பிலிப் டூ ஒலீவேரியா (Filipe de Oliveira) சங்கிலி (II) செகராசசேகரனை நல்லூரில் சிறையிலிட உத்தரவிட்டான். பின்பு சங்கிலி (II) செகராசசேகரனையும் அவரது மனைவியும் கொழும்புக்கு அனுப்பப்பட்டனர். அதற்குப் பின்பு பிரதான தளபதி டொம் கொன்ஸ்டன்டீனோ டு சா டு நொரொன்காவினால் (Dom Constantino de Sa de Noronha 1618-1620) அவர்கள் கோவாவுக்குகொண்டு கொண்டுச் செல்லப்பட்டார்கள். அந்த காலக்கட்டத்தில் பெயர்நாவோ டு அல்புக்கெருக் (Fernao de Albuquerque, Twenty first Governor 1619-1622) இருபத்து ஒராவது ஆளுநராக பணியாற்றினார்.
கோவாவில், மன்னன் சங்கிலி (II) செகராஜசேகரன் உயர்நீதிமன்ற விசாரனையில் அவரது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அவரைச் சிரைச்சேதம் செய்யும்படியான தீர்ப்பும் விதிக்கப்பட்டது. மன்னன் சங்கிலி (II) செகராஜசேகரன் சிறைவாசம் அனுபவித்த காலத்தில், அவர் தினமும் கோவாவில் உள்ள புனித பிரான்சிசு (St. Francis) துறவமடத்து குருவானவர்களால் சந்திக்கப்பட்டார். இவைகளுக்குப்பின் மன்னன் சங்கிலி (II) செகராஜசேகரன் தமது சொந்த மன விருப்பத்துடனே அவர் கிறிஸ்தவராக விரும்பினார். அந்த நிகழ்விற்கு அரச அந்தஸ்துக்குறிய ஆடைகளை உடுத்தச்செய்து அதே குருவானவர்களால் மன்னர் திருமுழுக்குப் பெற்று டான் பிலிப் (Dom Filipe) என்ற பெயரைப் பெற்றார், அவரது ராணியும் டோனா மார்கரிடா ஆஸ்திரியா (Dona Margarida de Austria) என்ற பெயரில் திருமுழுக்குப் பெற்றார். லிசபோனின் பேராயர் டொம் பெரி கிறிடோவாவோ (Archbishop Dom Frey Christouao de Lisboa) அவர்கள் ஞானப்பிதாவாக (Godfather) இருந்தார். கத்தோலிக்க திருச்சபையின் பெரிய பிரமுகர்கள் முன்னிலையில் மிகவும் ஆடம்பரமான அரச விழாவுடன் அவர்கள் ஞானஸ்நானம் பெற்றனர்.
மன்னன் சிங்கை ஆரியச்சக்ரவத்தி சங்கிலி (II) செகராசசேகரன் 1621 ஆம் ஆண்டில் சிரைச்சேதம் செய்யப்பட்டார். வண. பிதா பியர்ரானோ டு குறோஸ் (Fr. Fernao de Queyroz) அவர்களின் பதிவுகளின் படி, துக்க நிகழ்விற்காக ஜோடிக்கப்பட்ட ஒரு வீட்டு முற்றத்தில் கம்பளத்துடன் சிகப்பு நிறத்து மெத்தையுடன் ஒரு மேடை அமைக்கப்பட்டு, அவரது நல்மரணம் வேண்டி புனித பிரான்சிசு துறவமடத்து குருவானவர்களின் பவனியுடன் மன்னன் அழைத்து வரப்பட்டர். அவரது கைகளை அவர் கட்டுவதற்கு அனுமதிக்காது, தாம் செய்த குற்றங்களுக்காக தாம் மனதார மரிப்பதாகவும் கூறினார். தலையைச் சிரைச்சேதம் செய்யும் வேளையில் அவர் "ஏசு நாதரே" என்று அவர் தம் வாயால் உச்சரிக்கும் போது அவரது தலை வெட்டப்பட்டது. மரணத்திற்குப் பின்பு மன்னர் சங்கிலி (II) செகராசசேகரன் உயிரோடு இருக்கும் போது கூறிய அவரது சுய விருப்பத்திற்கினங்க புனித பிரான்சிஸ் (St. Francis) அடியார்களின் ஆடைக்கொத்த உடையை அணிவித்து, அவரை கிறிஸ்துவ அரச மரியாதையுடன் ஊர்வலம் கொண்டுசென்று பின்பு ஒரு சிற்றாலயத்தில் புதைக்கப்பட்டார். அவரது பட்டத்தரசியோ கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளின் மடத்திற்கு அமர்த்தப்பட்டு, முன்மாதியான ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்தார்.
சங்கிலி (II) செகராஜசேகரனுக்கு பல மனைவிகள்இருந்தார்கள். சங்கிலி (II) செகராஜசேகரன் மற்றும் அவரது மனைவி தேவி நாச்சியார் அவர்களுக்கும் (இவர்களின் திருமுழுக்கின் போது மன்னன் சங்கிலி (II) டான் பிலிப் என்றும் (Dom Filipe) மற்றும் ராணி தேவி நாச்சியார் டோனா மார்கரிடா ஆஸ்திரியா (Dona Margarida de Austria என்று பெயர் சூட்டப்பட்டனர்), பரராச பண்டாரம் (Pararasa Pandaram) (பீட்டர் என்றும் அழைக்கப்பட்டார்) என்னும் மகன் இருந்தான். அவரின் மகன் வீரபாகுவின் (Veera Bahu) (வின்சன்ட் என்றும் அழைக்கப்பட்டார்), அவர் மகன் தில்லையம்பலம் (Thillaiampalam), அவர் மகன் கார்திசேசு பண்டாரம் (Karthigesu Pandaram), அவர் மகன் புவிராஜ பண்டாரம் (Puviraja Pandaram), அவரின்மகன் குருநாதர் (Gurunathar), அவரின் மகன் Dr. வேதநாயகம் முதலி (Dr. Vedanayagam Mudali) ஆவார்.
Dr. வேதநாயகம் முதலி
யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்த Dr. வேதநாயகம் முதலி குருநாதரின் மகனும் புவிராஜ பண்டாரத்தின் பேரனும் ஆவார். அவர் தனது பரம்பரை மரபில் மிகவும் பெருமை கொண்டார். வேதநாயகம் முதலி தனது ஆரம்பக் கல்வியை வீட்டிலேயே தனது பெற்றோரின் நேரடி மேற்பார்வையில் கற்றார், பின்னர் அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள புனித யோவான் கல்லூரியில் தனது படிப்பைத் தொடர்ந்தார், இது இலங்கையின் பழமையான மற்றும் மதிப்புமிக்க தனியார் கல்வி ஸ்தாபகங்களில் ஒன்றாகும், இது 1823 இல் பிரிட்டிஷ் ஆங்கிலிகன் மிஷனரிகளால் (CMS) நிறுவப்பட்டது. வேதநாயகம் முதலி இந்துக் குடும்பத்தில் பிறந்தாலும், அவர் கிறிஸ்துவ மதத்தைத் தழுவினார் (அவர் ஜார்ஜ் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டார்). ஏனேனில், அக்காலத்தில் யாழ்பாணத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ பாடசாலைகளும் தமது மாணவர்கள் அனைவருக்கும் கிறித்தவப் பெயர்களை வைக்கும் நடைமுறையில் இருந்தது.
வேதநாயகம் முதலி தனது முன்னோர்களின் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார், மேலும் அவர் ஒரு சிறந்த மாணவர் மற்றும் தீவிர விளையாட்டு வீரராக இருந்தார். அவர் ஆடம்பரமான வாழ்க்கை முறையில் வாழ்ந்தார். யாழ்ப்பாணத்தில் தனது கல்வியை முடித்த பின்னர், மருத்துவத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் வேதநாயகம் முதலி இங்கிலாந்துக்குச் சென்றார், அங்கு அவர் மருத்துவ படிப்புக்களை முடித்து மருத்துவராகத் பட்டம் பெற்றார்.
மானிப்பாய், யாழ்ப்பாணம், திரும்பிய பின்னர் Dr. வேதநாயகம் முதலி யாழ்ப்பாணத்தில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பயிற்சி செய்தார். சில வருடங்கள் கழித்து சுண்டிக்குளியில் தங்கினார். அவர் மிகவும் புகழ்பெற்ற மருத்துவராகத் திகழ்ந்தார். Dr. வேதநாயகம் முதலி சுண்டிக்குளியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். அவரது தந்தை யாழ்ப்பாண செட்டி சமூகத்தைச் சேர்ந்தவர், அவர் யாழ்ப்பாணத்தின் சுண்டிக்குளியில் மிகவும் மதிப்புமிக்க மற்றும் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். திருமணத்தின் பின்னர் மானிப்பாய்க்கு குடிபெயர்ந்த தம்பதியருக்கு வேதநாயகம் தம்பையா முதலி என்ற மகன் பிறந்தான். "வேதநாயகம்" என்ற பெயர், தொடர்ந்து மூன்று தலைமுறைகளாகப் பயன்படுத்தப்பட்டது.
"முதலி" என்ற பட்டம் ஒரு பழங்கால பட்டமாகும், இது முதலில் இளவரசர் பரநிருபசிங்கனுக்கும் அவரது மகன் பரராஜசிங்கனுக்கும் வழங்கப்பட்டது. முதலி என்ற பட்டம் பரநிருபசிங்கன் முதலி மற்றும் பரராஜசிங்கன் முதலி ஆகியோரின் ஆண் வழித்தோன்றல்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டது.
யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துகீசியர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர், "ராஜா" என்ற அரச பட்டத்தை அரச குடும்ப உறுப்பினர்களின் பெயர்களுடன் இணைக்கக்கூடாது என்றும் அதற்கு பதிலாக ஆண் வழித்தோன்றல்கள் தங்கள் பெயருக்கு பின்னொட்டாகக் "முதலி" என்னும் பட்டத்தை பயன்படுத்தவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். "முதலி" என்ற பட்டப்பெயரை தங்கள் பெயர் பின் வைப்பதை பிற்கால தலைமுறைகளில் படிப்படியாக நிறுத்தப்பட்டது.
வேதநாயகம் தம்பையா முதலி
Dr. வேதநாயகம் முதலியின் புதல்வனான வேதநாயகம் தம்பையா முதலி யாழ்ப்பாணத்தில் மானிப்பாயில் பிறந்தார். இவர் ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தைச் சேர்ந்தவர். தனது புராதன பாரம்பரியத்தை எண்ணி பெருமை கொண்டார். வேதநாயகம் தம்பையா முதலி தனது தந்தையின் கடுமையான வழிகாட்டுதலின் கீழ் வளர்க்கப்பட்டார். இவர் நன்கு கற்றறிந்து யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில் முதன்மை அஞ்சல் நிலைய அதிகாரியாக பணிபுரிந்தார். வேதநாயகம் தம்பையா முதலி அவர்களுக்கு தம்பையா கதிரவேல் முதலி என்கிற மகனும் செல்லம்மா நாச்சியார் என்கின்ற மகளும் இருந்தனர். வேதநாயகம் தம்பையா முதலி அவர்கள் ராஜா ரெமீஜியஸ் கனகராஜா அவர்களின் தாய்வழி எள்ளுதாத்தா. வேதநாயகம் தம்பையா முதலி அவர்கட்க்கு யாழ்ப்பாணம் மற்றும் பூன்டுலோயாவில் இருந்த அவரின் மூதாதையர்களின் அனைத்து சொத்துகளையும் வேதநாயகம் தம்பையா முதலியின் எள்ளுதாத்தாவும், சிங்கை ஆரியகச்சரவர்த்தி சங்கிலி (II) செகராசசேகரனின் (1616-1620) பேரனுமாகிய வீர பாகு (வின்சென்ட் என்றும் அழைக்கப்பட்டார்) காலனித்துவ ஆட்சியில் போர்த்துகேயர்கள் மற்றும் ஒல்லாந்தர்களிடம் இருந்து மறைந்து வாழ்ந்து வந்தார். பூன்டுலோயாவில் பாரம்பரிய Ambagastenne Tea Estate மற்றும் மாட மாளிகை அமைந்திருந்தது. பெரும்பான்மையான இலங்கை தேயிலை தோட்டங்கள் கடற்பரப்பிலிருந்து 3,000 - 8,000 அடி வரையிலான உயரத்தில் அமைக்கபட்டிருக்கும். புண்டுலோயா, புண்டலோய என்றும் அழைக்கப்படும். பூன்டுலோயா இலங்கையின் மையமான மேட்டுநிலத்தில் அமைந்துள்ளது.
"T" வடிவிலான இரண்டடுக்கு மாட மாளிகை கட்டப்பட்டது. அங்கு அழகான தோட்டம் மற்றும் தாமரை நிறைந்த குளமும் இருந்தன. மாட மாளிகையானது மலைகள், தேயிலை தோட்டங்கள், பசுமையான களனி, வனம் மற்றும் நீரோடைகளாலும் சூழபட்டுள்ளது. திரு. பொன்னையா எட்வர்ட்ஸ் என்ற ஜான் எட்வர்ட்ஸ் அவர்களின் The Harrow Tea Factory, Planter’s Club ஆகிய அவரது உடைமைகள் அனைத்தும் மாட மாளிகைக்கு அருகாமையில் அமைந்திருந்தது. இலங்கையில் உள்ள கண்கவர் நீர்வீழ்சிகளுள் ஒன்றான 92 அடி உயரமான டன்சினேன் நீர்வீழ்சி (Dunsinane Waterfall) பூன்டுலோயா அருகில் உள்ளது. அதன் கரைகளில் அம்மன் கோவில் அமைந்துள்ளது. வேதநாயகம் தம்பையா முதலி பற்பல கோவில்கள் எழுப்பி தொடக்கத்திலிருந்தே பூன்டுலோயாவை அபிவிருத்தி செய்துவந்தார். இராஜ்ஜியத்திற்கு சொந்தமான நிலங்களானது யாழ்ப்பாண அரச குடம்பத்திற்க்கு மட்டுமே உரித்தானதாகும். அந்நிலங்கள் மற்றும் மாட மாளிகை ஆகியவற்றை எவ்விதத்திலும் பறிமாறவோ, விற்கவோ, அப்புறப்படுத்தவோ அல்லது குத்தகைக்கு விடவோ என்றும் அனுமதியில்லை.
தம்பையா கதிர்வேல் முதலி
வேதநாயகம் தம்பையா முதலியின் மூத்த புதல்வனான தம்பையா கதிர்வேல் முதலி யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில் பிறந்தார். இவர் ஒரு சிறந்த பண்பாளராகத் திகழ்ந்தார். இவர் முதலில் நல்லூரைச் சேர்ந்த முதலியார் கனகரத்தினம் தம்பிதுரை மற்றும் நாகம்மா ஆகியோரின் புதல்வியைத் திருமணம் செய்தார். இவர்கட்கு பிறந்த புதல்வன் தனது ஏழாம் அகவையில் மரணமடைந்தார். பின்பு தம்பையா கதிர்வேல் முதலி தனது மனைவியின் சகோதரியான இளவரசி அன்னபூரணி நாகமுத்துவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தின் ஐந்தாவது குழந்தையான இளவரசி அன்னபூரணி நாகமுத்து ஒரு பழமைவாதியாவார். அரச வம்சத்தினர் அரச பாரம்பரியத்தைக் காக்கும் பொருட்டு அரச குடும்பங்களுடன் மட்டுமே திருமணம் செய்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இவர்கள் தமது பரம்பரை இல்லமான யாழ்ப்பாணத்தில் நல்லூரில் அமைந்துள்ள “சங்கிலித் தோப்பில்” வசித்து வந்தார்கள். தம்பையா கதிர்வேல் முதலி மற்றும் இளவரசி அன்னபூரணி நாகமுத்து கதிர்வேல் ஆகியோர் ராஜா ரெமிஜியஸ் கனகராஜாவின் தாய் வழித் தாத்தா பாட்டி ஆவர். அன்றிருந்த சூழ்நிலையிலி இளவரசி அன்னபூரணி நாகமுத்து கதிர்வேல் தனது ஏழு குழந்தைகளையும் பிறப்பிலேயே இழந்தார். பின்பு இவர்கள் மலாயாவுக்குக் (மலேசியா) குடிபெயர்ந்து சென்று, பினாங்கு மற்றும் கோலாலம்பூரில் வாழ்ந்தார்கள். அங்கு தம்பையா கதிர்வேல் முதலி லாயன் புகையிரத நிலைய ஆணையாளராகப் பணிபுரிந்தார். கடைசியில் இவர்கட்கு த. க. அரசரத்தினம் (மலேசியா), த. க. நவரத்தினம் செல்வராஜா (சிரம்பன், மலேசியா), த. க. நடராஜா (நல்லூர்), மற்றும் த. க. தம்பிராஜா (மலேசியா), ஆகிய நான்கு புதல்வர்கள் பிறந்தார்கள்.
தம்பையா கதிர்வேல் முதலி நல்லூரில் செம்மணி வீதியில் அமைந்துள்ள “பவள வாசல்” என்றழைக்கப்பட்ட பெரு மாளிகையை தனது உடைமையாகக் கொண்டிருந்தார். பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட இம் மாளிகை தன்னகத்தே ஒன்பது அறைகளையும் மாளிகையின் நடுவே பெரு முற்றத்தையும் கொண்டிருந்தது. தம்பையா கதிர்வேல் முதலி பகட்டான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவர் தனது மூதாதையர்களின் வழியை பின்பற்றி சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடித்தார். மேலும் நன்கொடைகள் பலவும் வழங்கிவந்தார். இந்து வழக்கத்தின்படி வருடம் முழுவதும் விழாகோலமாக அனுசரிக்கப்பட்டது, இது போன்ற பண்டிகை காலங்களில் தம்பையா கதிர்வேல் முதலி அவர்களிடம் ஆசீர் பெறுவதற்காக மக்கள் திரளாக "பவள வாசல்" வந்து சென்றனர். அவ்வாறு வரும் மக்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளும் வாரி வழங்கினார். தம்பையா கதிர்வேல் முதலி அவர்கள் சிவபெருமானிடம் அதீத பற்றுடயவராவார். தனது பணி ஓய்வுக்கு பிறகு அவர் தமிழகத்தில் வேர்கொண்ட மிக தொன்மையான "சைவ சம்ப்ரதாயம்" என்றழைக்கப்பட்ட சித்த மருத்துவத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இது யாழ்ப்பாணத்தின் வானிலை சித்த மருத்துவம் வளர்வதற்கு சாதகமாக அமைந்திருந்தது. தம்பையா கதிர்வேல் முதலி தன் வாழ்நாள் முழுவதும் தனது மூதாதையர்களின் பெருமதிற்பு மிக்க கலாச்சாரத்தைப் பேணி வந்தார். இவரின் மரணம் அவரது குடும்பத்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் ஒரு பாரிய இழப்பாகும். மேலும் தேசவலமை சட்டத்தில் கையெழுத்திட்டவர்களில் இவரும் ஒருவர். இளவரசி அன்னபூரணி நாகமுத்து கதிர்வேல் மற்றும் நல்லூரை சேர்ந்த வில்லவராயர் சின்னத்தம்பி புலவர் (1716-1760) சொந்தங்கள் ஆவர் (Cousins). வில்லவராயர் சின்னத்தம்பி புலவரின் தந்தை, நன்கு கற்றறிந்த முதலியார் நாகநாதர் வில்லவராயர் அவர்கள், மக்களாலும் அரசாங்கத்தாலும் பெரிதும் போற்றப்பட்டார். முதலியார் நாகநாதர் வில்லவராயர் அவர்கள் நல்லூரை சேர்ந்த முதலியார் நாகநாதரின் புதல்வனாவார். மற்றும் இவர் சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி பரராசசேகரனின் (1478-1519) மற்றும் பூததம்பி முதலி வம்சாவளியில் வந்தவராவார். முனைவர். இலங்கை MP முருகேசு விஜயரத்தினம் நாகநாதன், (1906-1971), நல்லூரின் சங்கிலி தோப்பில் உள்ள தனது பூர்வீக வீட்டில் வாழ்ந்து வந்தார். கடற்படை அதிகாரியான இராஜன் கதிர்காமர், MVO. SL Navy மற்றும் Sir. சித்தம்பலம் ஆபிரகாம் கார்டினர் (1896-1960) இருவரும் அன்னபூரணி நாகமுத்து கதிர்வேலின் நெருங்கிய உறவுமுறைகளாவர் (Nephews).
இளவரசி அன்னபூரணி நாகமுத்து கதிர்வேல் அவர்கள் நாவாலியூர் சோமசுந்தர புலவர் (1876-1953), இராஜசிங்கம் சுவாமிநாதர் தங்கமுத்து ஆகியோரின் புதல்வரான அருட்தந்தை Rev. Fr. S. ஞானப்பிரகாசர், OMI (1875-1947), (இவர் நல்லூர் சுவாமி ஞானபிரகாசர் என்றும் அழைக்கப்பட்டார்), (Rev. Fr. S. Gnanaprakasar, OMI) (இயற்பெயர் வைத்திலிங்கம் (nee Vaithilingam) ஆகியோரின் நெருங்கிய உறவுமுறையாவார். அருட்தந்தை ச. ஞானப்பிரகாசரின் தந்தை இராஜசிங்கம் சுவாமிநாதர் தீவிர இந்துவர். மானிப்பாய் "வேலக்கை பிள்ளையார் கோவில்" அவரது அதிகாரத்தின் கீழ் இருந்தது. சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி புவி ராஜ பண்டாரம் பரராசசேகரனின் (1582-1591) வம்சாவளியை சேர்ந்த இராஜசிங்கம் சுவாமிநாதர் ஆசிரியர் பணியில் இருந்தார். அருட்தந்தை ச. ஞானப்பிரகாசரின் தாயார் தங்கமுத்து அவர்கள் கிராமசேவகர் வைரமுத்துவின் புதல்வனான கிராமசேவகர் வைரமுத்து சிற்றம்பலத்தின் மூத்த புதல்வி. மேலும் Sir. பொன்னம்பலம் ராமநாதன் (1851-1930), அருட்திரு. பி. ஜே. ஜீவரத்தினம் OMI (யாழ்ப்பாணம் இளவாலையில் உள்ள புனித ஹென்றி கல்லூரியின் (St. Henry’s College முகவர்) மற்றும் மானிப்பாயைச் சேர்ந்த பேராசிரியர். Prof. A. சின்னத்தம்பி (1911-1986), FRCH (Eng), FRCS (Edin), FRCOG, யாழ்ப்பாணம் சுண்டுக்குளியைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் த. சின்னையா யோககுமரன் (Superintendent of Police, SLPR) ஆகியோர் இளவரசி அன்னபூரணி நாகமுத்து கதிர்வேலின் உறவுமுறைகளாவார்.
இளவரசன் தம்பையா கதிர்வேல் அரசரத்தினம்
இளவரசன் தம்பையா கதிர்வேல் அரசரத்தினம் அவர்கள் தம்பையா கதிர்வேல் முதலி இளவரசி அன்னபூரணி நாகமுத்து அவர்களின் எட்டாவது புதல்வராவார். இளவரசன் தம்பையா கதிர்வேல் அரசரத்தினம் தனது மூன்று சகோதரர்களான இளவரசன் தம்பையா கதிர்வேல் நவரத்தினம் செல்வராஜா இளவரசன் தம்பையா கதிர்வேல் நடராஜா மற்றும் இளவரசன் தம்பையா கதிர்வேல் தம்பிராஜா ஆகியோருடன் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூரின் "பவள வாசலில்" வசித்துவந்தனர். நான்கு சகோதரர்களும் கண்டிப்புடன் தனது தாய்வழி பாட்டியினாலும் ஆசிரயராலும் வளர்கபட்டனர். யாழ்ப்பாணத்தின் புனித ஜோன்ஸ் கல்லூரியில் பயின்று விளையாட்டுகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட சிறந்த மாணவர்களாக திகழ்ந்த இவர்கள் தங்களது குடும்பத்துடன் ஒன்றாக இருந்தனர்.
இளவரசன் தம்பையா கதிர்வேல் அரசரத்தினம் தனது பள்ளி பருவத்திலிருந்தே திறமையான பேச்சாளராக திகழ்ந்தார், மேலும் நீதிமன்ற குழு உருபினராகவும் இருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறையின் முதன்மை அஞ்சல் நிலையத் தலைவராக பணிபுரிந்து பின்பு கொழும்பு செயலக அஞ்சல் நிலையத்திலும், வேறு சில இடங்களிலும் பணியாற்றினார். இளவரசன் தம்பையா கதிர்வேல் அரசரத்தினம், செல்லம்மா தம்பையா நாச்சியார் மற்றும் இந்தியாவில் உள்ள காவேரிபூம்பட்டினத்தை சேர்ந்த சமிந்தார் இராமசாமி சங்கரலிங்கம் கருப்பையா பிள்ளை அவர்களின் புதல்வியான அன்னம்மாவை மணந்தார். இளவரசி அன்னம்மா அவர்கள் அழகும் அன்பும் நிறைந்தவராக திகழ்ந்தார். இவரின் ஐந்து குழந்தைகளும் பிறப்பிலேயே இறந்தனர், பின்னர் அவர்கட்க்கு மகேஸ்வரி, யோகேஸ்வரி மற்றும் ராஜேஸ்வரி என்ற புதல்விகளும் மகேந்திரன் யோகராஜ் சுந்தரம் என்ற புதல்வனும் பிறந்தனர். தனது இளைய குழந்தையை பிரசவிக்கும் போது அவர் இறந்தார். அவரது பிள்ளைகளுக்கு தங்களது தாயாரின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பானது.
இளவரசியின் மரணத்திற்கு பிறகு தம்பையா கதிர்வேல் அரசரத்தினம் மறுமணம் புரிய வேண்டும் என அவரது பெற்றோரின் வற்புறுத்தலினால் செல்வம் பொருந்திய கோண்டாவிலை சேர்ந்த பூரணம் அவர்களை மணந்தார். அவர் மரியாதைக்குரிய குடும்பத்திலும் செல்வம் பொருந்தியவருமாக இருந்தார். அவர்களுக்கு ஆனந்தன் பூர்னரத்தினம் என்ற புதல்வனும் ரஞ்சி என்ற புதல்வியும் பிறந்தனர்.
இளவரசி மகேஸ்வரி அரசரத்தினம்
இளவரசர் தம்பையா கதிர்வேல் அரசரத்தினம் மற்றும் இளவரசி அன்னம்மா அவர்களளின் புதல்வி இளவரசி மகேஸ்வரி அரசரத்தினம் யாழ்பாணத்தில் பிறந்தார். இளவரசி மகேஸ்வரி அரசரத்தினம் அவர்கள் தனது இளைய சகோதரிகளான இளவரசி யோகேஸ்வரி மற்றும் இளவரசி ராஜேஸ்வரியுடன் யாழ்பாணத்திலே இளவாயிலில் உள்ள மிகவும் பிரசித்திப்பெற்ற திருக்குடும்ப அருட்சகோதரிகள் நடத்திய உறைவிடப் பள்ளியில் பயின்றனர் (Holy Family Convent). இவ் பாடசாலையானது யாழ்ப்பாணத்தில் உள்ள மிகவும் பிரபல்யமான பாடசாலைகளில் ஒன்றாகும். 1862 ஆம் ஆண்டில் இந்த பள்ளி புனித திருக்குடும்ப அருட்சகோதரிகளால் பொறுப்பு எடுக்கப்பட்டு இலங்கைத் தீவின் முதல் கான்வென்ட் பள்ளியாக மாறியது. ஜனவரி 1935 இல், பெல்ஜியத்தைச் சேர்ந்த அருட்சகோதரி வண. எம். சலோம் ரெய்னெர்ட் (Rev. Mother M. Salome Reynaert of Belgium) தனக்கு ஒப்படைத்த பணியை மிகுந்த பொறுப்புடன் மேற்கொண்டார். பின்னர் ஜனவரி 11, 1950 அன்று, யாழ்ப்பாணத்தின் இளவலை புனித குடும்ப கான்வென்ட்டின் அருட்சகோதரி வண. எம். சலோம் ரெய்னெர்ட் அவர்கள் திருக்குடும்ப மடத்தின் அதிபிரதான பதவிக்கு நியமிக்கப்பட்டார், அந்த நேரத்தில் பேரருட்திரு Rt. Rev. Dr. ஜெரோம் எமிலியானிஸ்பிள்ளை (Rt. Rev. Dr. Jerome Emilianuspillai OMI) யாழ்ப்பாணத்தின் ஆயராக இருந்தார். நல்லூரைச் சேர்ந்த அவர்களது உறவினர் Rev. Fr. S. ஞானபிரகாசர், OMI (1875-1947) (Rev. Fr. S. Gnanaprakasar, OMI (1875-1947) of Nallur). அவர்களின் தனிப்பட்ட பரிந்துரையின் பேரில் அவர்கள் சிறு வயதிலேயே உறைவிடப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். அரச குடும்பத்தை சேர்ந்த அவர்கள் மூவரையும் பெல்ஜியத்தைச் சேர்ந்த அருட்சகோதரி வண. எம். சலோம் ரெய்னெர்ட் (Rev. Mother M. Salome Reynaert of Belgium) அவர்கள் மிகவும் அன்புடன் வரவேற்றார். அவர்கள் அங்கு லாந்தர் செல்லதுரையின் புதல்விகளான தங்கள் தந்தைவழி உறவுமுறையான இரண்டு அத்தைகளை திருக்குடும்ப கான்வென்ட் இளவளையில் சந்தித்தனர். அவர்கள் அங்கு சார் சித்தம்பலம் கார்டினரின் (Sir Chittampalam Gardiner) மருமகளையும் சந்தித்தனர், அவர் புனித குடும்ப கான்வென்ட் இளவலையில் இளவரசி மகேஸ்வரி அரசரத்னத்துடன் படித்தார். மேலும் அவர்கள் தங்கள் உறவினர்களுடன் பல மகிழ்ச்சியான நாட்களை அங்கு கழித்தனர். லாந்தர் செல்லதுரையின் புதல்வியான நேசரத்தினம் செல்லதுரை அவர்கள் திருக்குடும்ப அருட்சகோதரிகள் பள்ளியில் பயின்றார். பின்னர் நேசரத்தினம் செல்லதுரை அவர்கள் கத்தோலிக்கத்தை ஏற்று அருட்சகோதரி லுமினா ஆனார். இதன் பின்னர் அவரிற்கு அருட்சகோதரி லுமினா என்ற பெயரே வழக்கமாயிருந்தது. இளவரசி மகேஸ்வரி அரசரத்தினம் அவர்கள் கல்வி மட்டுமல்லாமல் வலைப்பந்து, வரிப்பந்தாட்டம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கிய அவர் இசை, ஓவியம், மற்றும் சமூக நிகழ்வுகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவ்விளையாட்டு அணிகளின் தலைவராகவும் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பேதுரு இல்லத் தலைவியாகவும் (Peter House) முதன்மை மாணவர் தலைவியாகவும் இருந்துள்ளார். தனது படிப்பு முடிந்த பின் அருட்சகோதரிகளின் மடத்தின் தலைவரான, அருட்சகோதரி சலோம் ரெய்நேர்டின் (Rev. Mother Salome Reynaert) வேண்டுகோளிற்கு இணங்க கரம்பொன் மற்றும் பருத்தித்துறையில் அமைந்துள்ள லிற்றில் பிளவர் பள்ளியில் (Little Flower Convent) ஆங்கிலம் பயிற்றுவித்தார். மேலும் யாழ்பாணத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் (Teachers Training College) பணியாற்றினார். அவர் பணிபுரிந்த குறுகிய காலத்தில் அவரது சக ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடம் அதீத மதிப்பு பெற்றிருந்தார்.
எழில் கொஞ்சும் செம்மேனியும் நீண்ட கருங்கூந்தலும் கொண்ட கட்டழகியாக திகழ்ந்த இளவரசி மகேஸ்வரி அரசரத்தினம் அவர்கள் அறிவாற்றலிலும் சிறந்தவராக விளங்கினார். சிறந்த ஆடை ஆபரணங்களையே விரும்பிய இளவரசி அவர்கள் பாரம்பரியமான சேலை உடுத்தி நெற்றியல் திலகமிட்டு கொல்வதையே வழக்கமாக கொண்டிருந்த அவர், சிலாகிக்கும் வாழ்கை முறையை பெரிதும் விரும்பினார். இளவரசி அவர்கள் ச. சி. தம்பிராஜா மற்றும் குழந்தைவேல் பொன்னாம்பிகை அவர்களின் புதல்வனான தம்பிராஜா ம. கனகராஜாவை மணந்தார். இளவரசர் தம்பையா கனகராஜா அவர்கள் நன்கு கற்றறிந்தவரும் பக்திமானாகவும் திகழ்ந்த அவர் மேலும் பூன்டுலோயாவில் உள்ள அம்பகச்தேன் தேயிலை தோட்டத்தின் (Ambagastenne Tea Estate) உரிமையாளரும் ஆவார். இரண்டாம் உலக போரின் போது இலங்கை பீரங்கிபடையில் பணியாற்றினார். இத்தம்பதியினருக்கு இராஜேந்திர சில்வெஸ்டேர், மெரில் வெனதிஸ், ரெமிஜியஸ் என்ற மூன்று புதல்வர்களும் வனஜா மரியா கியூனீ மற்றும் ஜெரால்டின் என்ற இரு புதல்விகளும் பிறந்தனர். இவர்கள் தன் பெற்றோர்களின் கண்காணிப்பில் கண்டடிப்புடன் வளர்கபட்டனர்.
துரதிஷ்டவசமாக அவர்களது மூத்த புதல்வன், இளவரசன் இராஜேந்திர கனகராஜா தன் இளவயதிலயே மரணமடைந்தார். அவர் தனது தந்தை வழி பாட்டி திருமதி குழந்தைவேல் பொன்னாம்பிகை தம்பிராஜாவின் கல்லறைக்கு அருகாமையிலேயே புதைக்கப்பட்டார்.
அவர்களது இரண்டாவது புதல்வியான இளவரசி வனஜா கனகராஜா அவர்கள் சாவகச்சேரியை சேர்ந்த சபாபதி சுப்பையா அவர்களின் புதல்வன் சிவதாசனை மணந்து பின்பு நெதர்லாந்து சென்ற அவர்களுக்கு ரஜீந்தர், நவீன், பிரவின் என்ற மூன்று புதல்வர்கள் பிறந்தனர். அவர்களது மூத்த புதல்வன் ரஜீந்தர் சிவதாசன், இளவரசன் மெரில் கனகராஜா சந்திரமதி அவர்களின் புதல்வி அகிலா கிளெமென்டினை 2012 இல் மணந்தார்.
மூன்றாவது மகனான இளவரசன் மெரில் கனகராஜா அவர்கள் கந்தையாவின் புதல்வி சந்திரமதியை மணந்தார். இவர்களுக்கு அகிலா கிளெமென்டின் மற்றும் அச்செல்ல மெலோனி என்ற புதல்விகள் பிறந்தனர்.
அவர்களின் நான்காவது புதல்வியான இளவரசி ஜெரால்டின் கனகராஜா அவர்கள் ஜெரோம் பிரிதிவிராஜ் பாலச்சந்திரனை மணந்தார். இவர்கட்கு மஹா அன்டொய்நெட் என்ற புதல்வி பிறந்தார். ஜெரோம் பிரிதிவிராஜ் பாலச்சந்திரன் யாழ்பாணத்தை சேர்ந்த மத்திய அஞ்சல் பரிமாற்ற மையத்தின் ஓய்வு பெற்ற அஞ்சல் நிலைய அதிகாரியான மகாலிங்கம் பாலச்சந்திரன் மற்றும் ஏஞ்சலின் பாலச்சந்திரன் (இயற்கைப்பெயர் குணவர்த்தன (nee Goonawardene) ஆகியோரின் புதல்வன் ஆவார். ஏஞ்சலின் பாலச்சந்திரன் மொறகொட வளவயைச் சேர்ந்த ஆர்டி எ. வ. ந. கொதவர்தனின் (Late A. W. N. Goonawardene of Artie - Moragoda Walawwa) புதல்வி ஆவார்.
ஐந்தாவது புதல்வரான ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் 2003 இல் ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தின் மரபுகள், பாரம்பரியங்கள் அனைத்தும் குடும்பத்தினரின் ஆதரவு மற்றும் அனுமதியுடன் நடைமுறைக்கு உட்படுத்தப்பண்ணினார். 2005 யூன் 15 ல் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் அனைத்து யாழ்ப்பாண அரச குடும்பத்தினரின் பெரும் வரவேற்பிற்கிணங்க, அரச சடங்குகளுடன் அரச குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ராஜா ரெமிஜியஸ் கனகராஜா, யாழ்பாணத்தின் நல்லுரை சேர்ந்த எம்மானுவேல் ரத்னஜோதி இராஜரத்தினத்தின் புதல்வி ஐஸ்வர்யா ராஜநந்தினி லுசிஜாவை மணந்தார். ஆனால் இத்தம்பதியினர் 2006 ஆம் ஆண்டிலிருந்து அதிகாரபூர்வமாக பிரிந்து வாழ்கின்றனர்.
இளவரசி மகேஸ்வரி கனகராஜாவின் சகோதர சகோதரிகள்
இளவரசி யோகேஸ்வரி கிறிஸ்தோபல் அரசரத்தினம் சமூகம், இசை மற்றும் தையல் வேலைகளிலும் அதீத ஈடுபாடு கொண்டிருந்தார். இளவரசி யோகேஸ்வரி கிறிஸ்தோபல் அரசரத்தினம் அவர்கள் சுப்பையா கதிர்வேலை மணந்தார். இவர்களுக்கு மோகன்ராஜ் என்ற புதல்வன் பிறந்தார்.
இளவரசி ராஜேஸ்வரி மீரியம் தெராசீட்டா அரசரத்தினம் அவர்கள் வலைப் பந்தாட்டம் மற்றும் மேசைப் பந்தாட்டம் ஆகிய விளையாட்டுகளை விரும்பினார். அதன் சான்றாக மாவட்ட அளவிலான மேசைப் பந்தாட்டத்தில் இருமுறை கலந்து கொண்டு பரிசினை வென்றார். இளவரசி அவர்கள் யாழ்ப்பாணத்தின் பலாலியில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் மூன்று வருடம் ஆசிரியர் பயிற்சி பெற்றார். பயிற்சி முடித்து காவலூரின் கரம்பொன்னில், ஊர்காவற்றுறையில் உள்ள சிறு மலர் பள்ளியில் ஆங்கில ஆசிரியரானார். பின்பு அதே பள்ளியின் துணைமுதல்வராக பணியமர்த்தப்பட்ட அவர் ஒழுக்கம் நிலைநாட்டுபவராகவும் மதிப்பிற்குரியவராகவும் அனைவராலும் கருதப்பட்டார். இளவரசி ராஜேஸ்வரி மீரியம் தெராசீட்டா அரசரத்தினம் அவர்கள் சூசைபிள்ளை சவேரிமுத்துவின் புதல்வன் அந்தோனி பிள்ளையை மணந்தார். அவர்களுக்கு ஜெரார்ட் பயஸ், ரெஜினால்ட் மைக்கல் மற்றும் யுஜீன் வெனசியஸ் என்ற மூன்ற புதல்வர்கள் பிறந்தனர்.
இளவரசன் மகேந்திரன் யோகராஜா சுந்தரம் மெல்வின் அரசரத்தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்டான்லி கல்லூரியில் பயின்றார். தனது கல்லூரி நாட்களில் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் மேலும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இளவரசன் மகேந்திரன் யோகராஜா சுந்தரம் மெல்வின் அரசரத்தினம் அவர்கள் சாரதா என்பவரை மணந்தார், அவர்களுக்கு சாந்திஇ சுரேஷ், நிஷாந்த குமார மற்றும் துஷாந்தி புதல்வர்கள் மற்றும் புதல்விகள் பிறந்தனர். இளவரசன் மகேந்திரன் இரண்டாவது முறையாக ஸ்காட்லாந்ததை சேர்ந்த ஆர்தர் லெஸ்லி மெல்வில் ஆக்னெஸ் ராபர்ட் தம்பதியினரின் புதல்வியான டொரத்தி மேரியை மணந்தார். அவர்களுக்கு ரபிந்திரன் என்ற புதல்வன் பிறந்தான்.
இளவரசன் தம்பையா கதிர்வேல் அரசரத்திணத்தின் சகோதரர்கள்
இளவரசன் தம்பையா கதிர்வேல் நவரத்தினம் செல்வராஜா அவர்கள் தனது இளமைக் காலம் முதல் சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்தார் என்பதற்கு சான்றாக தன் பள்ளியின் சார்பாக கால்ப்பந்து மற்றும் மட்டைப்பந்து விளையாட்டுகளில் கலந்துகொண்டார். இளவரசன் அவர்கள் யாழ்பாணத்தில் கேம்ப்ரிட்ஜ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்பு மலேசியா சென்று விளையாட்டுகளில் ஈடுபட்டார். இளவரசன் தம்பையா கதிர்வேல் நவரத்தினம் செல்வராஜா அவர்கள் வல்லிபுரம் செல்லையா நெல்லியடியை சேர்ந்த செல்லமா முத்தையா ஆகியோரின் மகள் சீதா தேவியை மணந்தார், அவர்களுக்கு சுசீலன், சோமன் மற்றும் பாமன் என்ற மூன்று புதல்வர்களும் பாமா என்ற புதல்வியும் பிறந்தனர். இளவரசர் தன் குடுப்பம் சகிதமாக மலேசியாவில் குடியேறினார்.
இளவரசன் தம்பையா கதிர்வேல் நடராஜா அவர்கள் யாழ்பாணத்தை சேர்ந்த DR. சரவண பாலசூரியா அவர்களின் புதல்வியான புனிதவதியை மணந்தார். இவர்களுக்கு சிவஞானம் சோதி என்ற புதல்வி பிறந்தார். இளவரசன் தம்பையா கதிர்வேல் நடராஜா அவர்கள் தனது மனைவியின் தமக்கையான மதுரத்தை இரண்டாவதாக மணந்தார். இவர்களுக்கு வாரிசு ஏதும் இல்லை. இவ்விரு மனைவியரும் இளவரசருடன் மகிழ்ச்சியுடன் வசித்துவந்தனர்.
இளவரசன் தம்பையா கதிர்வேல் தம்பிராஜா அவர்கள் மானிப்பாயை சேர்ந்த தனது நெருங்கிய உறவான (Cousin) தில்லம்பலம் கார்த்திகேசு அவர்களின் புதல்வியான பகவதி செல்வரத்னத்தை மணந்தார். அவர்களுக்கு தவமணி தேவி, ஜீவனாயகி, செல்வநாயகி மற்றும் இராஜநாயகி என்ற நான்கு புதல்விகளும் ஜெயக்குமார், விஜயகுமார் என்ற இரண்டு புதல்வர்ளும் பிறந்தனர்.
முதல்லியார் கனகரத்தினம் தம்பிதுரை - (Ref. Family Tree - 2)
சிங்கை பரராசசேகரன் (1478-1519) + வள்ளியம்மை அரசகேசரியின் (2வது மனைவி)
|
பரநிருபசிங்கன் முதலி
|
பரராஜசிங்கன் முதலி
|
இளவரசி வேதவள்ளி (மாதகலை) + தனபால முதலி
மாதகலை சேர்ந்த இளவரசி வேதவள்ளி அவர்கள் பரராஜசிங்கன் முதலியின் புதல்வியும் பரநிருபசிங்கன் முதலியின் பேத்தியுமாவார். அவர் சிங்கை பரராசசேகரன் (1478-1519) வள்ளியம்மை அரசகேசரியின் கொல்லு பேத்தியுமாவார். இளவரசி வேதவள்ளி அவர்கள் இராஜேந்திர முதலி அவர்களின் புதல்வனான மாதகலின் வெள்ளாள தலைவர் தனபால முதலியை மணந்தார். இவர்களின் இரண்டாவது புதல்வி முதலியார் சிதம்பரநாத நரசிங்க மாப்பானா அவர்களின் புதல்வன், இரண்டாம் முதலியார் சிதம்பரநாதனை மணந்தார். இவர்களின் புதல்வன் முதலியார் சிதம்பரநாத சித்தம்பலம் முதலியார், இராசசிங்கம் கரலசிங்கத்தின் புதல்வி சீதேவிபிள்ளையை மணந்தார். இவர்களின் புதல்வன் சித்தம்பலம் திருசெல்வராயருக்கு கரலபிள்ளை என்ற புதல்வன் உள்ளார், இவரது புதல்வி சாந்தியால் கரலபிள்ளை அவர்கள் சூசைபிள்ளையை மணந்தார். இவர்கட்கு மரியாமுத்து சூசைபிள்ளை என்ற புதல்வி பிறந்தார், அவர் கனகரத்தினம் என்பவரை மணந்தார். இவர்களுக்கு முதலியார் கனகரத்தினம் தம்பிதுரை, செல்லதுரை, ராஜதுரை என்ற மூன்று புதல்வர்களும் நல்லம்மா, முத்தம்மா என்ற இரு புதல்வியரும் பிறந்தனர்.
முதலியார் கனகரத்தினம் தம்பிதுரை அவர்கள் மாரியமுத்து சூசைபிள்ளை மற்றும் கனகரத்தினம் அவர்களின் புதல்வராவார். இவர் மக்களிடம் செல்வாக்கும், அவர்களால் பெரிதும் போற்றப்படுபவராக திகழ்ந்தார். முதலியார் கனகரத்தினம் தம்பிதுரை அவர்களின் பரம்பரை வீடானது யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூரின் "சங்கிலி தோப்பு" ஆகும். இவர் நல்லூரைச் சேர்ந்த நாகம்மாவை மணந்தார். முதலியார் கனகரத்தினம் தம்பிதுரை மற்றும் நாகம்மா அவர்கள் ராஜா ரெமிஜியஸ் கனகராஜாவின் தாய் வழி கொள்ளுத் தாத்தா பாட்டி ஆவர். இவர்கட்கு பத்து புதல்விகளும் ஒரு புதல்வனும் பிறந்தனர். இவர்களில் முதல் ஏழு புதல்விகளின் பெயர்கள் அறியப்படவில்லை. மற்றைய மூன்று புதல்விகளின் பெயர்கள் அன்னபூரணி நாகமுத்து, வள்ளியம்மை மற்றும் தங்கமுத்து ஆகும். இவர்களின் புதல்வனின் பெயர் சுளியோதயர். இக்குழந்தைகள் அனைவரும் யாழ்ப்பாணத்தில் நல்லூரில் உள்ள “சங்கிலி தோப்பிலேயே” பிறந்து வளர்ந்தனர். மேலும் இவர்கள் அனைவரும் மேற்தட்டு குடும்பத்திற்குள் திருமணம் செய்து கொடுக்கப்பட்டனர்.
முதலியார் கனகரத்தினம் தம்பிதுரை நாகம்மாவின் புதல்வரான Proctor சுலியோதையர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூரில் சிறந்த அதிகாரியாக திகழ்ந்தார். மேலும் சமயம் சார்ந்த விஷயங்களில் அதீத ஆர்வம் கொண்டிருந்த அவர் யாழ்ப்பாண மக்களுக்கு உதவுவதில் தலைசிறந்தவராக விளங்கினார்.
லாந்தர் செல்லதுரை அவர்கள் முதலியார் கனகரத்தினம் தம்பிதுரை நாகம்மாவின் பேரனாவார். "லாந்தர்" என்ற பட்டம் சூட்டப்பட்ட அவர் தான் நல்லூரிலேயே முதன் முதலில் சொந்தமான குதிரை வண்டியை கொண்டிருந்தார்.
முதலியார் கனகரத்தினம் தம்பிதுரை நாகம்மா இவர்களின் புதல்வியான வள்ளியம்மை பாண்டிய வம்சாவாளியை சேர்ந்த கோணமலை அவர்களுக்கு மணமுடிக்க பட்டார். பின்பு கோணமலை தன் குடும்பத்துடன் திரிகோணமலையில் குடியேறினார்.
தங்கமுத்து மற்றும் இலட்சுமணன் அவர்களின் மூத்த புதல்வனான முத்து சாம்பன் (முத்து சயம்பு மற்றும் சயம்பு மாஸ்டர்) 1866 ஆம் ஆண்டில் நல்லூரில் பிறந்தார். முத்து சயம்பன் அவர்கள் சுண்டிக்குளியை சேர்ந்த மீனாச்சியை மணந்தார். ஆகஸ்ட் மாதம் 1888 ஆம் ஆண்டு முத்து சயம்பன் அவர்கள் காரைநகரில் இந்து ஆங்கில வித்தியாலயத்தை நிறுவினார். அப்பள்ளி, திருஞான சம்பந்த மூர்த்தி நயினார் வித்யாலயம் என்று பெயர் மாற்றப்பட்டது. ஆங்கிலமும் சைவ நெறியும் இப்பாடசாலையில் கற்றுக்கொடுக்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டு மீண்டும் அப்பள்ளியின் பெயரானது காரைநகர் இந்து கல்லூரி என்று மாற்றியமைக்கப்பட்டது. முத்து சயம்பன் அவர்கள் அப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து பின்பு தலைமை ஆசிரியராக டிசம்பர் 1931 வரை பணியாற்றினார். நல்லூரைச் சேர்ந்த ஸ்ரீ ஆறுமுக நாவலரால் ஈர்க்கப்பட்ட முத்து சயம்பு மாஸ்டர் அவரது சமூக சேவைகளுக்காக ”ஸ்ரீ ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்திற்கு அவ்வாறே, முத்து சயம்பன் காரைநகரிற்கு” என்று சொல்லப்பட்டார். ஸ்ரீ ஆறுமுக நாவலர், முத்து சயம்பு மாஸ்டர் இவ்விருவரும், சீரழிக்கும் மேல் நாட்டு கலாச்சாரத்திடமிருந்து கிழக்கை காக்கும் உத்வேகம் மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டவராகத் திகழ்ந்தனர்.
முத்து சயம்பு மாஸ்டரின் அயராத முயற்சிகளால் அந்த பள்ளிக்கூடத்தின் தரமானது உயர்வடைந்து 1921 இல் யாழ்ப்பாண இந்து கல்லூரியோடு இணைப்பு பெற்றது. ஸ்ரீ ஆறுமுக நாவலர் மற்றும் முத்து சயம்பு மாஸ்டர் அவர்களால் அனேகர் ஈர்க்கப்பட்டு பல பாடசாலைகள் சைவ ஆலயங்கள் எழுப்பச்செய்து காரைநகரில் சைவ மறுமலர்ச்சி இயக்கத்தை செய்தனர்.
சிவகொழுந்து அவர்கள், தங்கமுத்து இலட்சுமணன் அவர்களின் புதல்வி மற்றும் முத்து சயம்பனின் இளைய சகோதரியாவார். சிவகொழுந்து அவர்கள், மேன்மைவாய்ந்த குடும்பத்தை சேர்ந்த செல்லப்பா அவர்களின் புதல்வன் Gate முதலியார் முத்துத்தம்பியை மணந்தார். அவர் செல்வ செழிப்பு மிகுந்தவராகவும் "தமிழ் அகம்" என்ற பெயரில் உள்ள அவரது இல்லத்தில் வசித்துவந்தார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட Gate முதலியார் முத்துத்தம்பியின் குடும்பத்தினர், ஆனைப்பந்தியில் வசித்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆனைப்பந்தியில், அவர்களை கௌரவிக்கும் விதமாக "முத்துத்தம்பித் தெரு" என்று பெயரிடப்பட்டுள்ளது. Gate முதலியார் முத்துத்தம்பி நல்லூரைச் சேர்ந்த Rev. Fr. S. ஞானபிரகசர் OMI (1875-1947) (Rev. Fr. S. Gnanaprakasar, OMI (1875-1947) of Nallur). அவர்களின் நெருங்கிய உறவினர் ஆவார். Gate முதலியார் முத்துத்தம்பி அவர்கள் தெற்கு ஆசியாவிலேயே மிக பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு பற்பல புத்தகங்கள் நன்கொடையாக வழங்கியுள்ளார், அங்கு தோரயமாக 97,000 புத்தகங்களும் 10,000 மேலான கையெழுத்துப் பிரதிகள் மற்றும் விலைமதிக்க முடியாத புத்தகங்களும் உள்ளன. 1981 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண பொது நூலகம் தீயிடப்பட்ட போது அத்தகைய அரிதான புத்தகங்கள் அனைத்தும் தீக்கிரையாகின. யாழ்ப்பாண பொது நூலகம் தெற்கு ஆசியாவிலேயே மிக பெரிய நூலகங்களில் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இளவரசி செல்லமா தம்பையா நாச்சியார் (Ref. Family Tree - 3)
Dr. வேதநாயகம் தம்பையா முதலி
|
வேதநாயகம் தம்பையா முதலி
|
தம்பையா கதிர்வேல் முதலி
மானிப்பாயில் பிறந்த இளவரசி செல்லமா தம்பையா நாச்சியார் அவர்கள் வேதநாயகம் தம்பையா முதலி அவர்களின் இளைய புதல்வியும்இ தம்பையா கதிர்வேல் முதலியின் இளைய சகோதரியுமாவார். இளவரசி அவர்கள் தனது தாயார் மற்றும் ஆசிரியரின் கண்காணிப்பில் பயின்றார். இளவரசி செல்லமா தம்பையா நாச்சியார்இ ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்களின் தாய் வழி உறவு மற்றும் தந்தை வழி கொள்ளு பாட்டியுமாவார். செல்லமா தம்பையா நாச்சியார் அவர்கள் இந்தியாவில் உள்ள காவேரிபூம்பட்டினத்தை சேர்ந்த ஜமிந்தார் இராமசாமி சங்கரலிங்கம் கருப்பையாப்பிள்ளை அவர்களுக்கு மணமுடித்து கொடுக்கப்பட்டார். பூம்புகார் என்றழைக்கப்படும் காவேரிபூம்பட்டினம் தமிழ்நாட்டில் உள்ள நாகபட்டினம் மாவட்டத்தின் சீர்காழி தாலுக்காவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு கொண்ட அவ்விடமானது முற்கால சோழ மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய இவ்விடமானது கிழக்கு கடற்கரையில் அமைந்த செழுமையமான துறைமுகமாக இருந்தது. இந்நகரின் சிறப்புகள் சிலபத்திகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை ஆகிய காவியங்கள் மற்றும் பல சங்க இலக்கிய பாடல்களில் பாடப்பட்டுள்ளது. சோழ மற்றும் பாண்டிய இராஜியத்தில், "பிள்ளை" என்ற தமிழ் பட்டமானது சிறந்த வெள்ளாளர் தலைவர்களுக்கு அரசரால் அளிக்கப்பட்டது.
செல்லம்மா தம்பையா நாச்சியார் ஜமிந்தார் இராமசாமி சங்கரலிங்கம் கருப்பையா அவர்களுக்கு பெரியத்தங்கம், பொன்னுத்தங்கம், அன்னம்மா, இராசம்மா, சின்னத்தங்கம், ச. சி. தம்பிராஜா, ச. சி. ராஜரத்தினம், சிவபாக்கியம் மற்றும் ரத்னம் என்ற ஏழு புதல்விகளும், இரு புதல்வர்களும் பிறந்தனர்.
மூத்த புதல்வியான பெரியத்தங்கம், பருத்தித்துறையை சேர்ந்த முருகேசு கந்தையாவின் புதல்வன் பொன்னையா எட்வர்ட்ஸ் என்ற ஜான் எட்வர்ட்சை மணந்தார், வாரிசு எவரும் இல்லை. பொன்னையா எட்வர்ட்ஸ் இரண்டாம் முறையாக தனது முதல் மனைவியின் தமக்கையான பொன்னுத்தங்கம் அவர்களை மணந்தார், இவர்கட்க்கு செல்வலட்சுமி எட்வர்ட்ஸ் என்ற புதல்வி பிறந்தார். செல்வலட்சுமி எட்வர்ட்ஸ் அவர்கள்தான் அக்குடும்பத்தின் முதல் பேரப்பிள்ளையாவார். பொன்னையா எட்வர்ட்ஸ் அவர்கள் நிலங்கள், ஹீவேன்வேவா தேயிலை தோட்டம் (Heavenwewa Tea Factory) மற்றும் பூன்டுலோயாவில் பதினெட்டு Transport Lorries சொந்தமாக கொண்டிருந்தார். மேலும் அவர் கோவில்கள் எழுப்பியுள்ளார், நன்கொடைகள் பலவும் வழங்கியுள்ளார்.
அன்னம்மா தம்பய்யா கதிரவேல் முதலி மற்றும் அன்னபூரணி நாகமுத்து அவர்களின் மகன் இளவரசன் த. ச. அரசரத்தினத்தை மணந்தார். அவர்களுக்கு மகேஸ்வரி, யோகேஸ்வரி மற்றும் ராஜேஸ்வரி என்கின்ற மூன்று பெண் பிள்ளைகளும் மகேந்திரன் யோகராஜ் சுந்தரம் என்கின்ற ஆண் பிள்ளையும் இருந்தனர்.
துர்திஸ்டவசமாக அவர்களின் நான்காவது மகள் ராசம்மா இளம் வயதினிலே மரித்துவிட்டார். ஜமிந்தார் ராமசாமி சங்கரலிங்கத்தினால் அவர்களின் அன்பு மகளின் நினைவாக பூண்டுலோயா மாளிகைக்கு அருகாமையிலே ராசம்மா இந்து கோவில் ஒன்று கட்டப்பட்டது.
சின்னத்தங்கம் துரைசாமியை மணந்து அவர்களுக்கு மணி என்னும் பெண் பிள்ளை பிறந்தது. அப்பிள்ளை கன்னிப்பருவத்திலேயே மரித்துவிட்டார்.
ச. சி. ராஜரட்ணம் அன்னரட்ணத்தை மணந்ர்தா. அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். இரண்டு பெண்களின் பெயராவது சிவனேஸ்வரி மற்றும் மகேஸ்வரி. இரண்டு ஆண்களின் பெயராவது ஹரி பத்மநாதன் மற்றும் பூனேஸ்வரன்.
சிவபாக்கியம் ஆறுமுகத்தை மணந்து அவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் பெயராவது பரமேஸ்வரி, ஏகா (கன்னிபருவத்திலேயே மரித்துவிட்டார்), மோகனா மற்றும் சூரிய காந்தி.
ரட்ணம் தம்பிராஜாவை மணந்து அவர்களுக்கு முன்று பிள்ளைகள் பிறந்தார்கள். ஒரு மகன் (பெயர் தெரியவில்லை) மற்றும் இரண்டு மகள்கள் பெயராவது பத்மா மற்றும் புஸ்பா.
ஜமிந்தார் இராமசாமி சங்கரலிங்கம் கருப்பையாபிள்ளை அவர்கள் இந்தியாவில் உள்ள மானாமதுரையில் மாடமாளிகை மற்றும் கழனிகளை சொந்தமாக கொண்டிருந்தார். மானாமதுரையில் உள்ள வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள அவரது மாடமாளிகையானது அழகான தோட்டதாலும், கழனிகளாலும் சூழபட்டிருந்தது. மேலும் தென் இந்தியாவில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தின் உள்ள "நரிக்குடி" என்ற கிராமத்தை சொந்தமாக்கிகொண்டார். தனது இறுதி காலங்களை மானாமதுரை மற்றும் பூன்டுலோயாவில் உள்ள மாளிகையில் கழித்தார்.
ச. சி. தம்பிராஜா
ச. சி. தம்பிராஜா அவர்கள் ஜமிந்தார் சங்கரலிங்கம் மற்றும் இளவரிசி செல்லம்மா தம்பைய்யா நாச்சியார் அவர்களின் பிள்ளையும், மூத்த ஆண் மகனுமாவார். அவர் அனைவராலும் அதிகம் மதிக்கப்பட்டு போற்றப்பட்டார். அவர்களின் இரு புதல்வர்கள் ச. சி. தம்பிராஜா மற்றும் ச. சி. இராஜரத்தினம் அவர்கள் கண்டியில் உள்ள ட்ரினிட்டி கல்லூரியில் (Trinity College in Kandy) பயின்றனர். ச. சி. தம்பிராஜா அவர்கள் கொளந்தவேல் பொன்னம்பிக்கியை செட்டி மணந்தார். கொளந்தவேல் பொன்னம்பிக்கியை அவர்கள் ஒரு கொழும்பு செட்டி குடும்பத்தை சேர்ந்தவர். அவரது முன்னோர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களாவார்கள். கொளந்தவேல் பொன்னாம்பிகைக்கு சிறந்த தனித்தன்மை இருந்தது, அவர்கள் நன்றாகக் கற்றறிந்த நபராவார், ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருந்தார்கள். கொளந்தவேல் பொன்னம்பிக்கை ஒரு பழமைவாத கலாச்சாரத்துக் குடும்பத்தில் இருந்து வந்தவர், ஒரு பக்தியுள்ள சைவ சமயக்கொள்ளையுடையவரும், கோவில்களுக்கு பல நன்கொடைகள் செய்பவருமாக இருந்துள்ளார். அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்தனர். மூன்று மகன்களின் பெயராவது த. செல்வராஜா, த. ராஜசிங்கம் மற்றும் த. ம. கனகராஜா மற்றும் த. பத்மாவதி இராசாத்தி, த. யோகேஸ்வரி என்ற இரு புதல்விகளும் பிறந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களது மூத்த புதல்வன் த. செல்வராஜா அவர்கள் தனது பதினெட்டாம் அகவையில் காலமானார். ச. சி. தம்பிராஜா மற்றும் கொளந்தவேல் பொன்னம்பிக்கியை, ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்களின் தந்தை வழி தாத்தா பாட்டி ஆவர். ச. சி. தம்பிராஜா அவர்கள் தெய்வ பத்தி உள்ளவராக அனைத்து மதசார்பான நிகழ்வுகளில் பங்களித்தார்.
அருணாசலம் செட்டி
கொளந்தவேல் பொன்னம்பிக்கியின் தாய் மாமன் அருணாசலம் செட்டி காலியில் வசித்து வந்தார். அருணாசலம்செட்டி ஒரு சிங்களப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர் ஒரு செல்வந்த உயர்தரக்குடும்பத்தைச் சேர்ந்தவர். குறிப்பாக காலியில், கொழும்பு செட்டிகளின் குடும்பங்கள் முன்னணி சிங்களகுடும்பங்களை திருமணம் செய்துகொள்வது வழக்கம். அவர்களுக்கு பாபா என்ற மகளும், சிரில் என்ற மகனும்இருந்தனர். இந்த ஜோடி மார்டினஸ் என்ற மகனையும் தத்தெடுத்திருந்தார்கள். பாபா ராபர்ட் பெரேராவைமணந்தார் (கிரீன்லாந்து மருந்தகத்தின் முன்னாள் உரிமையாளர்). அவர்களுக்கு பிரான்சிஸ்கா என்ற (சாந்திஎன்றும் அறியப்பட்ட) மகள் இருந்தாள். அவர்கள் கொழும்பில் உள்ள செயின்ட் பிரிட்ஜெட்ஸ் கான்வென்ட்டில்தனது கல்வியை முடித்தார்கள். பிரான்சிசா (சாந்தி) லக்ஷ்மணனை மணந்தார். அவர்களுக்கு வேலானணி மற்றும்வேளாங்கண்ணி என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். பின்னர் வேளாங்கண்ணி ரோமன் கத்தோலிக்ககன்னியாஸ்திரி ஆனார்.
பண்டிகை காலங்களில் தென் இந்தியாவிலிருந்து இசைக்கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் நடனக்கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்து பண்டிகைகள் அனைத்தும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு மக்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. குடுபத்திடயே இருந்த சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் அனைத்தும் தலைமுறை தலைமுறையாக கைகொள்ளப்பட்டு வந்தது. ஜமிந்தார் சங்கரலிங்கம் அவர்களின் மூத்த புதல்வனான ச. சி. தம்பிராஜா அவர்கள் தலைமுறையாக கைகொள்ளப்பட்டு வந்த சம்பிரதாயங்கள் அனைத்தும் கைகொண்டார்.
ச. சி. தம்பிராஜா அவர்கள் தனது மனைவியை மிகவும் நேசித்தார், ஆதலால் அவரது மனைவிக்கு தனது மாளிகை அருகிலேயே "கல்லறை" ஒன்றை அமைத்து அதில் தனது மனைவியின் அஸ்தியை வைத்தார். அக்கல்லறையானது ச. சி. தம்பிராஜா அவர்களால் வடிவமைக்கப்பட்டது, அதன் அழகு அருகாமையில் உள்ள நகரத்திலிருந்தும் பார்த்து ரசிக்கும் வகையில் உயரமாக கட்டமைக்கப்பட்டிருந்தது. அதன் உயரத்தைதை வைத்தே அது பூண்டுலோயா என கணிக்கப்படுகின்றது. தினம் காலை பிரார்த்தனைகளை முடித்து கல்லறையின் மீது கும்பை மலர்களை (Gardenia Flower) வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவர் நன்கொடைகள் பல வாரிவழங்கினார், வேற்று மத ஆலயங்களும் எழுப்பினார். மேலும் கோவில்கள் எழுப்புவதற்காக நிலங்கள் வழங்கியும் உள்ளார். இன்று வரை பூன்டுலோயாவில் உள்ள கடடொரபிட்டியவில் (Kadadorapitiya) புத்தர் கோவில் ஒன்று உள்ளது. ச. சி. தம்பிராஜா அவர்களின் மேல் இருந்த மதிப்பு மற்றும் மரியாதை நிமித்தமாக அவர் மறைந்த அன்று பூன்டுலோயா மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் அனைத்து அலுவலகங்களிலும் வெள்ளை நிற கொடி ஏற்றப்பட்டு அங்காடிகள் மூடப்பட்டது.
தயவு செய்து யாழ் ராஜ்ஜியத்தின் சரித்திரத்தைக் குறித்த மேலதிக விபரங்களுக்கு இவ் வலைத்தொடுப்பை பார்க்கவும்.