crest

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்

The Official Website of the Royal Family of Jaffna (Sri Lanka)

යාපනය රාජකීය පෙළපතේ නිල වෙබ් අඩවිය

King Statue

ராஜ நெறிமுறை

ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்

ராஜ பழக்க வழக்கங்கள்


இராஜ சம்பிரதாயங்களும் முறைகளும்

யாழ்ப்பாண ஆரியச்சக்ரவத்தி அரச குடும்பத்தின் காலா காலமான முறைமைகளின்படியே மகாராஜா அவர்களையும், அரச குடும்பத்தினரையும் அழைக்கும், வாழ்த்தும் மற்றும் வரவேற்கும் முறைகள் உள்ளன. இவ் இராஜ வழக்கங்கள் இக்காலங்களிலும் முறைமைகள் தவறாது பின்பற்றப்படுகின்றன.

இராஜ குடும்ப உறுப்பினரை அழைக்கும் முறை

உரையாடலின்போது மகாராஜா அவர்களை "மகாராஜா அவர்களே" என்று முதலில் அழைத்து பின்வரும் தருணங்களில் "ராஜா அவர்களே" அல்லது ஆங்கில முறையின்படி "Your Highness" அல்லது "Sir" என்று அழைக்க வேண்டும்.

அரச குடும்பத்தின் ஆண் உறுப்பினர்களை அழைக்கும் போது முதலில் "இளவரசன்" என்று அழைத்து பின்வரும் தருணங்களில் "இளவரசன் அவர்களே" அல்லது ஆங்கில முறையின்படி "Your Highness" அல்லது "Sir" என்று அழைக்க வேண்டும்.

அதேபோல் அரச குடும்பத்தின் பெண் உறுப்பினர்களை அழைக்கும் போது முதலில் "இளவரசி" என்று அழைத்து பின்வரும் தருணங்களில் "இளவரசி அவர்களே" அல்லது ஆங்கில முறையின்படி "Your Highness" என்று அழைக்க வேண்டும்.

வாழ்த்தும் முறை

இலங்கையில் பல்வேறுபட்ட கலாசாரங்களும் பல பண்பாடுகளும் இருப்பதனால் தமிழ் பண்பாட்டில் "வணக்கம்" என்று வாழ்த்துவதும் சிங்களத்தில் "ஆயு போவன்" என்று வாழ்த்துவதும் வழக்கம். இரு கரங்களையும் கூப்பி நெஞ்சு முன் வைத்து "வணக்கம்" அல்லது "ஆயு போவன்" என்று கூறுவதே இலங்கை கலாசார வழக்கமாகும்.

கைகுழுக்கி வாழ்த்து கூறுவது மேற்கத்தைய கலாசாரமுமாக இருப்பதினால், ஒருவர் ராஜா அவர்களுக்கு கைகுழுக்கி வாழ்த்து தெரிவிப்பதாயின், அவருக்கு ராஜா அவர்களே தனது கைகளை முதலில் கொடுத்து வாழ்த்த முயன்ற பின்னரே அவர் ராஜாவுக்கு கைகொடுக்க வேண்டும்.

விருந்தினரை வரவேற்கும் முறை

இலங்கை கலாசாரத்தின் படி விருந்தினரை பூமாலை அணிவித்து அல்லது பூச்செண்டு கொடுத்து வரவேற்பது வழக்கம். இவ் வழக்கத்தின்படி யாராகிலும் ராஜா அவர்களை வரவேற்க விரும்பினால் அவர்கள் ராஜா அவர்களுக்கு பூமாலையை அணிவிக்காமல் இரு கரங்களினாலும் அவரது கரங்களில் கொடுப்பது முறையாகும். ஆனால் பூச்செண்டை வழக்கப்படியே இரு கரங்களினாலும் அவருக்கு கொடுக்கலாம்.

பாரம்பரிய ஆலத்தி வரவேற்கும் முறை

ஒருவரை வரவேற்கும்போது அவருக்கு "ஆலத்தி" செய்து, பன்னீர் தெளித்து, குங்கும சந்தன பொட்டும் இட்டு வரவேற்கும் கலாசார முறையும் உள்ளது. எனிலும் இவ் "ஆலத்தி" செய்து ராஜா அவர்களை வரவேற்பவர்கள் பன்னீர் தெளித்தோ அவருக்கு "சந்தனம்" "குங்குமம்" இட்டோ வரவேற்காது ஆலத்தி மட்டுமே செய்து வரவேற்பது முறையாகும்.

பொன்னாடை சாற்றுதல்

பாரம்பரியமாக உயர்ந்த பட்டு சால்வையை தோள்களில் அணிவித்து வரவேற்பது ஒரு வரவேற்கும் கலாசார முறையாகும். இவ்வண்ணம் யாராகிலும் ராஜா அவர்களை வரவேற்க விரும்பினால் ராஜா அவர்களுக்கு "பொன்னாடையை" அவர் தோள்களில் அணிவிக்காமல் அதை இரு கரங்களினாலும் அவரது கைகளில் கொடுப்பது பொருத்தமாகும்.

அன்பளிப்பு வழங்குதல்

எவராகிலும் ராஜா அவர்களுக்கு நினைவுப் பரிசாக வாழ்த்துமடலோ பூச்செண்டோ அல்லது வேறு ஏதாவது பொருட்களோ கொடுக்க விரும்பினால் ராஜா அவர்களுக்கு இரு கரங்களினாலும் பணிவாக கொடுத்தல் வேண்டும்.