crest

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்

The Official Website of the Royal Family of Jaffna (Sri Lanka)

යාපනය රාජකීය පෙළපතේ නිල වෙබ් අඩවිය

King Statue

தமிழில் வாசிக்க: இராஜ அணிகலன்

In English: The Royal Coat of Arms

The Coat of Arms

யாழ்ப்பாண அரசர்களான ஆரியச்சக்கரவர்த்திகளின் இராஜ அணிகலமானது 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இவ் இராஜ அணிகலமானது 2005 ஆம் ஆண்டு மறுபடியும் மீளமைப்பு செய்யப்பட்டது. பாரம்பரிய கூற்றின்படி அதன் சின்னங்களும் அச்சின்னங்களின் இராஜ ஒழுங்கமைப்புக்களும் ஸ்ரீ இராமனால் அருளப்பட்டதாகும். இந்தியாவின் தென்கிழக்கு கரையோர (செது) பகுதியில் பிரபல்யமாக திகழ்ந்த ஒரு புனித தளமான இடத்தின் அடையாளத்தை தக்கவைத்துக்கொள்ள அரச குடும்பமானது முடிவெடுத்தது.

விவரணம்

இராஜ அணிகலத்தின் முக்கிய கூறுகள் பின்வருவன : அரச மகுடமானது யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை பிரதிபலிக்கின்றது. யாழ்ப்பாண அரசர்களான ஆரியச்சக்ரவர்த்திகளின் மகுடமானது கூம்பு வடிவத்தில் அமையப்பட்டிருத்தது. அவ் மகுடம் தங்கத்தில் செய்யப்பட்டு விலையுயர்ந்த ரத்தினங்களான, மாணிக்கங்கள், வைரங்கள், மரகதங்கள், நீல மாணிக்கங்கள், மஞ்சள் மாணிக்கங்கள் மற்றும் விலையுயர்ந்த முத்துக்களால் பொருத்தப்பட்டது.

வட்டமான தங்க நிற எல்லைக் கோடுடைய கவசமானது வெள்ளை பின்னனி நிறத்துடன் மிக முக்கியமான சின்னங்களை காண்பிக்கின்றது. அமர்ந்து இடதுபக்கம் நோக்கி வலது காலில் ஊன்றி இருக்கும் நந்தி அதன் திமில், பெரிய அலை தாடி மற்றும் வெட்டப்படாத கருமையான அதன் கொம்புகளுடன் உள்ளது. நந்தியின் உருவம் ஆழ்ந்த சிவப்பு நிற (Magenta) எல்லைக் கோடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் அதன் கழுத்து தங்க மணிகள் கோர்க்கப்பட்ட தங்கச் சங்கிலியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பழங்காலம் தொட்டு நந்தியானது புனிதமான விலங்காக பார்க்கப்பட்டு அது விசுவாசத்திற்கும், தூய்மைக்கும், வல்லமைக்கும் பிரதிபலிக்கப்பட்டது. நந்தியானது சிவ பெருமானின் அதிகாரப்பூர்வ காவலனாகவும் அவரது பிரதாண வாகனமாகவும் திகழ்கின்றது.

நந்திக்கு மேலாக நடுவில் தங்க நிறப் பட்டுக் குஞ்சங்கள் தொங்கவிடப்பட்ட வெள்ளை நிற குடை காணப்படுவதோடு பட்டுக் குஞ்சங்களின் நுனியில் முத்துக்கள் கோர்க்கப்பட்டிருக்கின்றன. இக் குடையானது அரச அதிகாரத்தையும் வல்லமையும் பிரதிபலிக்கின்றது. ஒற்றை வலம்புரிச் சங்கானது மிகவும் அபூர்வமானதோடு அது மிகவும் புனிதமானது. இந்த வலம்புரிச் சங்கானது வல்லமையையும், அதிகாரத்தையும், அரசாளுகையும் பிரதிபலிக்கின்றது. செம்பிறையும் சூரியனும் நித்தியத்தை அடையாளமாக பிரதிபலிக்கின்றது.

நந்திக்கு கீழ் கிடைமட்டமாக "செது" என புராண தழிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் எழுத்தான “செது" சேதுகாவலன் என்னும் அர்த்தமாகும். யாழ்ப்பாண அரசர்களான ஆரிய சக்ரவர்த்திகளுக்கு சேதுகாவலன் என்னும் பட்டப்பெயரும் இருந்தது.

வட்ட வடிவிலான இச் சின்னத்தைச் சுற்றி நறுமணம் கொண்ட துளசி மாலை சுற்றப்பட்டுள்ளது. இது சைவ சமயத்தில் ஒரு புனிதச் செடியாகும். இந்த துளசிச் செடி நமஸ்காரமானது புராணக்காலத்து வேத ஆச்சாரமானதாகும், அது ஆயிரம் வருடங்கள் தாண்டி இன்றும் செய்துகொண்டு வரப்படுகின்றது.

இராஜ அணிகலமானது வரலாற்று பேராசிரியர்களான Dr. சிவசுப்பிரமணியம் பத்மநாதன், B.A. (Hons), Ph.D. (Jaffna), மற்றும் Dr. சமாதிலிங்கம் சத்தியசீலன், B.A. (Hons), M.A. Ph.D. (Jaffna) ஆகியோரின் ஆலோசனைகளுடன் உருவாக்கப்பட்டது.

இராஜ அணிகலமானது பிரபுக்களின் உயர் சபையில் அங்கம்வகிக்கும் (Hoge Raad van Adel - The High Council of Nobility), அணிகலக் கலைஞர் (Heraldic Artist 1986-2015) Ing. C. Q. C. M. Walschots என்பவரால் வரையப்பட்டது.

இராஜ அணிகலத்தின் பதிப்புரிமைகள் தொடர்பாக

இவ் இராஜ அணிகலமானது அரச குடும்பத்தின் தலைமையகத்திற்கும், அரச குடும்பத்தினருக்கும், அரச குடும்பத்து உறுப்பினருக்கும் சொந்தமானதாகும். இவ் இராஜ அணிகலம் மற்றும் அதன் சின்னங்களானது அரசவையாலும் அரச குடும்ப உறுப்பினர்களாலும் மாத்திரமே உபயோகிக்க முடியும். யாழ்ப்பாண அரச குடும்பத்தின் முன் அனுமதியின்றி இவ் இராஜ அணிகலத்தை மறுபதிப்பு செய்யவோ, பயன்படுத்தவோ மற்றும் வெளியிடவோ முடியாது. இவ் சின்னத்தை எவ்வித தவறான வகையிலும் துஷ்பிரயோகம் செய்தால் பதிப்புரிமையின் விதிமுறை மீறும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ் இராஜ அணிகலமானது அரசவையின் அனுமதியுடன் மாத்திரமே பயன்படுத்தவோ, வெளியிடவோ முடியும்.

எவராகிலும் இவ் இராஜ அணிகலத்தினை அல்லது இராஜ சின்னங்களை வெளியிட அல்லது பயன்படுத்த அனுமதி கோருவதற்கு எங்களை தொடர்பு கொள்ளவும் தொடர்புகொள்ளவும்.