வரவேற்புச் செய்தி
இலங்கை மக்களுக்கும் மற்றும் உலகம் முழுவதும் பரந்து வாழும் அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துக்கள். பல வகையான பண்பாட்டு பாரம்பரியங்கள் நிறைந்த யாழ்ப்பாண இராச்சியத்தைக் குறித்து விரிவுபடுத்தும் இந்த இணையத்திற்கு உங்களை மிக மகிழ்ச்சியுடன் நான் வரவேற்கின்றேன்.
புவியியல் ரீதியாக யாழ்ப்பாண குடாநாடானது அதன் ஏழு சிறிய தீவுகளுடன் இலங்கை தீவை முடிசூட்டுகின்றது. தமிழர்கள் முக்கியமாக தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து குடியேறினார்கள். பண்டைய காலங்களில் இவ் இலங்கை தீவானது திராவிட வம்சாவழியினரான சேர, சோழ, பாண்டிய, வல்லவ மற்றும் விஜயநகர என்பவர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இவ் அனைத்து இராச்சியங்களும் தங்கள் இராச்சியம் நிலவிய காலங்களில், பரவலாக பரவியிருந்து முழு இந்திய, தென் ஆசிய பிராந்தியங்களில் ஆதிக்கம் செலுத்தியது.
என் முன்னோர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தை பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் இருந்து பதினேழாம் நூற்றாண்டுகள் வரை ஆட்சிசெய்தனர். செவ்விருக்கை நாட்டில் நல்லூர் எனும் இடத்தைச் சேர்ந்த சக்கரவத்தி சிங்கை ஆரியன் செகராசசேகரன் என்பவரே ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தை நிறுவியவர். ஆரியச் சக்கரவத்திகள் காலத்தில் யாழ்ப்பாண இராச்சியமானது ஒரு சுயாதீன முடியாட்சியாக யாழ்ப்பாண நல்லூரை தலைநகரமாக கொண்டிருந்தது.
யாழ்ப்பாண இராச்சியமானது ஒரு சுயாதீன முடியாட்சியாக யாழ்ப்பாண நல்லூரை தலைநகரமாக கொண்டிருந்தது. யாழ்ப்பாண இராச்சியமானது போர்த்துகச்கேயரினால் 1621 இல் கைப்பற்றப்பட்டாலும் யாழ்ப்பாண அரச வம்சமானது இன்றும் என் மூலமாகவும் என் குடும்பம் மூலமாகவும் மேலும் பல அரச குடும்பங்கள் மூலமாகவும் இன்றும் உள்ளது. யாழ்ப்பாண இராச்சியமானது ஓர் காலத்தில் ஒரு வலுவான இராச்சியமாக இருந்துள்ளதென்ற சரித்திரத்தை இன்றைய இளைய தலைமுறையினருக்கும் மற்றும் உலகிற்கும் தெரியப்படுத்தும் ஆவலின் நிமித்தமே தற்போது இவ் வம்சாவழியின் நேரடி வாரிசாக உள்ள நான் முன்வந்து இவற்றை அறிவிக்கின்றேன். அத்தோடு நான் இவ் உலகிற்கு நினைவுபடுத்த விரும்புவது யாதெனில் தழிழர்கள் தாம் பெருமைகொள்ளும் வண்ணம் தங்களுக்கென்ற ஒரு வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை கொண்டுள்ளனர் என்பதே. மேலும் எல்லா இலங்கை மக்களும் சமாதானமாகவும் கண்ணியமாகவும் சுபீட்சமாகவும் இவ் பல்லின சமூகத்தில் வாழவேண்டும் என்பதே என் மெய்யான விருப்பமாகும். இலங்கை மக்கள் மீது சமாதானம் நிலவ நான் இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்.
சிங்கை ஆரியன் சேதுக்காவலன் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா
யாழ்ப்பாண அரச குடும்பத்தின் தலைவர்
ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்