crest

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்

The Official Website of the Royal Family of Jaffna (Sri Lanka)

යාපනය රාජකීය පෙළපතේ නිල වෙබ් අඩවිය

King Statue

News

Urgent Press Release

The Coat of Arms

Arya Cakravarti Dynasty

THE FOLLOWING STATEMENT IS ISSUED BY
HRH RAJA REMIGIUS KANAGARAJAH OF JAFFNA


This afternoon I had a telephone discussion with the Deputy Inspector General of Police (DIG), in charge of the Northern Range in Jaffna, regarding the case of Ms. S. Vithiya, student of the Pungudutivu Maha Vidyalayam.

It has been brought to my attention that suspects, who were in connection to the case of Ms. S. Vithiya, have been arrested. These suspects will be brought before a Court of Justice.

I urge the public to remain calm and not to take the law into their own hands and allow the law enforcement officers to carry out their duties.

On behalf my family and myself, I extend our sincere condolences to all members of her family, relatives, friends and to all school students of the Northern Province. May God give strength to the family of the deceased and may the departed soul rest in eternal peace.

புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவி வித்தியாவின் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான Police DIG உடன் இன்று பிற்பகல் நான் தொடர்பு கொண்டு உரையாடினேன். அப்போது செல்வி சி. வித்தியா கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் பற்றி எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அந்த நபர்கள் நீதி மன்றத்திற்கு முன்பாக கொண்டுவரப்படவுள்ளார்கள். அதுவரை பொதுமக்கள் யாவரும் அமைதியாக இருந்து சட்டத்தை தமது சொந்த கைகளில் எடுக்காது சட்ட அமுலாக்க அதிகாரிகள் தமது கடமைகளை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

கடந்த 13ம் திகதி பாடசாலைக்கு செல்லும் வழியில் கடத்தப்பட்டு கூட்டுவன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட, சி. வித்தியா அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். அத்தோடு அவர்களின் குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் பாடசாலை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்குறள் என பல அறநெறி தத்துவங்களும் பண்பாடுகளும் கலாசாரங்களும் நிறைந்தனவே நமது தமிழினமாகும். தொல்காப்பியரின் இலக்கணம் மற்றும் மூத்த தமிழ் ஞானிகளின் அறநெறி தத்துவங்களும் இன்னும் உலக மக்களால் போற்றப்பட்டு தமிழையும் தமிழினத்தவரையும் வரலாற்றுமிக்க மூத்த மொழியாகவும் தொன்மைவாய்ந்த மக்களாகவும் பார்க்கின்றனர். எனிலும் இவ்வாறான பண்புள்ள கலாசாரத்தின் பின்னணியில் வளர்ந்த தழிழராகிய நாம் இவ்வாறான வன்செயல்களை செய்து நமக்கொரு இழிவான பெயரை தேடிக்கொண்டது தழிழினத்திற்கே மிகுந்த வேதனையை தருகின்றது.

Rajadhani Nilayam
The Netherlands