crest

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்

The Official Website of the Royal Family of Jaffna (Sri Lanka)

යාපනය රාජකීය පෙළපතේ නිල වෙබ් අඩවිය

King Statue

News

Deepam Press News

The Coat of Arms

ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්‍රවර්තී රාජවංශය

Arya Cakravartti Dynasty

யாழ் பல்கலைகத்திற்கு வரும் வெளியிட மாணவர்கள் எமது கலாசாரத்தை மாற்ற முனையக்கூடாது: யாழ் ராஜா கடுந்தொனியில் கண்டனம்!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அண்மையில் மாணவர்களிற்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் யாழ்ப்பாண ராச்சியத்தின் முடிக்குரிய அரசர் ராஜா ரெமீஜீயஸ் கனகராஜா கடும் தொனியிலான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். யாழ் பல்கலைகழகத்திற்கு கல்வி நடவடிக்கைக்காக வெளியிடங்களிலிருந்து வரும் மாணவர்கள் யாழ்ப்பாண கலாசாரத்தை மாற்ற முனையக்கூடாதென்று அறிவுறுத்தியுள்ளதுடன், மாணவர் மோதலிற்கு நிர்வாக சீரின்மையே காரணமென்றும், அற்கு பொறுப்பேற்று துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் பதவி விலக வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

மாணவர் மோதல் தொடர்பாக தீபம் செய்திச்சேவைக்கு கருத்து கூறும்போது-

“யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நீண்ட காலமாகவே மாணவர் மோதல் கலாசாரம் தொடர்ந்தபடியிருக்கிறது. இது பற்றிய நிறைய முறைப்பாடுகள் எனக்கு வந்த வண்ணமுள்ளன. இந்த மோதல்களிற்கு காரணம் பல்கலைகழக அமைப்பில் பிழையுள்ளது. மாணவர்களை வழிப்படுத்த, மாணவர்களிற்கு கல்வியில் கவனத்தை குவிக்க முறையான செயற்திட்டமில்லை.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் கற்பதற்காக வெளியிலிருந்து வருபவர்கள் எமது கலாசாரத்தை மாற்ற முடியாது. நமது கலாசாரத்தின்படியே நடக்க வேண்டும். விஞ்ஞானபீடத்தில் அதிக சிங்கள மாணவர்கள் உள்ளதாக சில ஊடகங்கள் கூறுகின்றன. அப்படியிருந்தாலும், யாழ்ப்பாண பல்கலைகழகமென்பது தமிழ் கலாசாரத்தின் கண்ணாடி. அதைதான் பிரதிபலிக்க வேண்டும். சிங்கள பல்கலகழகங்களிற்கு செல்லும் தமிழ் மாணவர்கள், அந்த சூழலுடன் இணைந்து கல்வி கற்று வரவில்லையா? அதுபோலத்தான் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்க வருபவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மாணவர்களிற்காக யாரும் குரல் கொடுப்பதற்கு இல்லையென்பதால்த்தான் இப்படியான சிக்கல் ஏற்படுகிறது.

இந்த நெருக்கடிக்கு காரணம் பல்கலைகழக நிர்வாக சீரின்மை. அவர்கள் நிகழ்வை முறைப்படி ஒழுங்கமைத்திருக்க வேண்டும். இற்த குழப்பத்திற்கு தார்மீக பொறுப்பேற்று துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் பதவி விலக வேண்டும். அவரது காலத்தில்த்தான் பல்கலைகழகத்தில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன“ என்றார்.

External Links:

www.deepamnews.com/யாழ்-பல்கலைகத்திற்கு-வரு/

Rajadhani Nilayam
The Netherlands