crest

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்

The Official Website of the Royal Family of Jaffna (Sri Lanka)

යාපනය රාජකීය පෙළපතේ නිල වෙබ් අඩවිය

King Statue

News

ராஜதானி நிலையத்திலிருந்து செய்தி வெளியீடு

The Coat of Arms

ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්‍රවර්තී රාජවංශය

Arya Cakravartti Dynasty

திருக்கேதீஸ்வரம் வீதி வளைவு சேதமாக்கப்பட்டதைக் குறித்து யாழ்ப்பாண மன்னரின் அறிக்கை.


சென்ற ஞாயிற்றுக்கிழமை 03/03/2019 அன்று மன்னாரில் நடைப்பெற்ற திருக்கேதீஸ்வரம் வீதி வளைவு தேதமாக்கப்பட்ட நிகழ்ச்சிகளும், என் தமிழ் மக்கள் தங்கள் சொந்த இன மக்களை எதிர்ப்பதும், சண்டைபண்ணுவதுமான காரியங்களை நான் அறிந்து, அவற்றை பார்வையிட்டு மிகவும் மனம் வருந்தினேன்.

தமிழ் மக்களாகிய நாம் பல மத, ஆலய சம்பரதாய பின்னனிகளைக் கொண்டிருந்தாலும் நாம் என்றுமே தமிழர் என்பதை மறக்கக்கூடாது! நாம் நமக்குள் ஒற்றுமை இல்லாமல், பிறர்மேல் இவர்கள் நம்மை இனத்துவேசம் செய்தார்கள் என்று சொல்வது எந்தவகையில் நியாயமாக உள்ளது? நம் மக்களே ஒருவரை ஒருவர் உதாசீனப்படுத்தும் பொது, நமக்கு வெளியிடங்களில் இருந்து கெளரவம் கிடைக்குமா?

எதுவாக இருந்தாலும் என் மன்னார் தமிழ் மக்களாகிய நீங்கள் ஒரு மத நம்பிக்கையை மதிப்பளித்து, அவர்கள் திருவிழா முடிந்தபின் விவாதம் செய்திருந்தால் நலமாக இருந்திருக்கும். இன்று சைவ மதத்தவரின் திருவிழாக்கள் மனக்கசப்போடும், மன நிறைவின்றி நடக்கவேண்டிய கட்டாயம் சற்று யோசிக்காது செயல்ப்பட்ட முற்கோபங்கள் அல்லவா காரணம்? இவற்றால் இன்று நாம் என்ன நல்லதை சம்பாதித்துவிட்டோம்?!

அதோடு ஒருவர் சைவ நந்தி கொடிய காலால் மிதிப்பதையும் கவனித்தேன். உங்கள் சொந்த வரலாற்றுக்கொடியை இப்படி மிதிப்பதால், உங்கள் சொந்த தமிழ் இனத்தையே அவமானம் செய்கின்றீர்கள் அல்லவா? பின் நீங்கள் எங்கள் வரலாறு, எங்கள் இனம் அழிகின்றது என்று சொல்லலாமா?!

என் தமிழ் மக்கள் இவ்வாறான வெட்கம் மிகுந்த செயலை செய்ததினால் நான் மனவருந்துவதோடு, இவற்றை மதியில்லாது செய்து தமிழ் மக்கள் மத்தியில் பிரிவுகளை உண்டாக்கியவர்களையும் வன்மையாக கண்டிக்கிறேன்!


Rajadhani Nilayam
The Netherlands