crest

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்

The Official Website of the Royal Family of Jaffna (Sri Lanka)

යාපනය රාජකීය පෙළපතේ නිල වෙබ් අඩවිය

King Statue

News

Letter sent to Sivapoomi Palace of Thiruvasagam – Dr. Aru Thirumurugan

The Coat of Arms

ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්‍රවර්තී රාජවංශය

Arya Cakravartti Dynasty

திருவள்ளுவர் ஆண்டு 2051


சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்களுக்கு எனது வணக்கம்,

யாழ் நாவற்குழியில் சிவபூமி அரும்பொருள் காட்சியகம், சிவபூமி முதியோர் இல்லம், சிவபூமி பாடசாலைகள், சிவபூமி மருத்துவ நிதியம், சிவபூமி மனவிருத்திப் பாடசாலைகள் என பல சமூக சேவைகளை உங்கள் சிவபூமி அறக்கட்டளையினால் நீங்கள் செய்வதை கேள்விப்பட்டு நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன். கடந்த நாட்களில் நான் உங்கள் மூத்த சகோதரனுடன் தொலைபேசியில் உரையாடியபோது, மக்கள் நலனுக்காகவும், சமுதாயத்திற்காகவும் நீங்கள் கொண்டிருந்த உங்கள் பிரயாசங்களும், தொலைநோக்கு பார்வையும், உங்களின் பலவருட கடின உழைப்பின் ஆயத்தங்களையும் நான் கண்டுகொண்டேன். குறிப்பாக யாழ் நாவற்குழியில் சிவபூமி அரும்பொருள் காட்சியகத்தின் நோக்கத்தையும் அதற்கான உங்கள் மிகுந்த பிரயாசங்களையும் உங்கள் மூத்த சகோதரனுடன் உரையாடும் போது அதிகம் அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

யாழ்ப்பாண சரித்திரங்களும் அதன் பெருமைகளும் சிதைந்து கொண்டிருக்கும் இக்காலங்களில் உங்களினது இந்த மாபெரும் சேவையானது மிகவும் பாராட்டுதலுக்குறியது! அது பல நூற்றாண்டுகளாக நம் மக்களுக்கு கேள்வியாகவும் ஆவலாகவும் இருந்துள்ளது. ஆகவே தற்போது இவ் சிவபூமி அருங்காட்சியகமானது நம் மண்ணின் கடந்த காலங்களின் பொற்கால சரித்திரங்களையும், பாவனைகளையும், தாலந்துகளையும், பெருமைகளையும் இக்காலத்தில் விடையாக அவர்களுக்கு அளிக்கின்றது. படித்து தெரிந்திட விரும்பாதவர்களும் பார்த்தே பயின்றிட கூடுமான அளவுக்கு உங்கள் யாழ் நாவற்குழியில் உள்ள சிவபூமி அரும்பொருள் காட்சியம் ஒரு மகா பெரிய பொக்கிஷம்!

மீண்டுமாக சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, அவரோடு உடனிருந்து அவர் சேவைகளுக்கு கைகொடுப்பவர் அனைவருக்கும் இவ் மடலினூடாக எனது மனம் நிறந்த வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவிக்கின்றேன். உங்கள் சேவைகள் ஓங்கியெழுந்து அறியாமை நீக்கும் கதிரவனாக என்றும் பிரகாசிக்கட்டும்.

இப்படிக்கு,

Sgnd/. ரெமிஜியஸ் கனகராஜா
(யாழ்ப்பாணத்து மகாராஜா)