News
சித்திரை புத்தாண்டை முன்னிட்டும், COVID-19ஐ முன்னிட்டும் வெளியடப்பட்ட அறிவித்தல்.
Monday 13 April 2020
ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්රවර්තී රාජවංශය
Arya Cakravartti Dynasty
A MESSAGE FROM HRH THE RAJA REMIGIUS KANAGARAJAH OF JAFFNA
FOLLOWING THE SINHALA AND TAMIL NEW YEAR
தமிழ் சிங்கள புது வருடமானது ஒரு முக்கியம் வாய்ந்த ஒரு பண்டிகையாகும். அது பழைய வருடத்தை முடித்து புதியதோர் ஆண்டின் ஆரம்பத்தை அடையாளப்படுத்தும் கொண்டாட்டமாகும்.
ஒவ்வொறு வருடமும் இந்த பண்டிகையானது சித்திரை மாதத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய பாரம்பரிய பண்டிகையாகும். எனிலும் தற்போது உள்ள COVID-19 சூழ்நிலையால் நமக்கு இந்த தமிழ் சிங்கள புத்தாண்டு பண்டிகையை ஒன்றிணைந்து அனுசரிக்க முடியாத நிலை உள்ளது.
நமது தற்போதைய முக்கியமான பிரதான இலக்கு இந்த தொற்றுண்ணியின் பரவலில் இருந்து பல மக்களை பாதுகாத்து, இத் தொற்றுண்ணியின் பரவலை தடுப்பதே! ஆகவே வழக்கம் போல அனைவரும் தங்கள் குடும்பத்தினரோடும், உறவினரோடும், நண்பர்களோடும் இந்த பண்டிகையை அனுசரிப்பது முடியாததாகும். இக்காரணங்களினால் நான் அனைவரையும் அன்பாக கேட்டுக்கொள்வது யாதெனில், அனைவரும் தங்கள் தங்கள் வீடுகளில் இருந்து இப் பண்டிகையை அனுசரிக்க வேண்டும். இதை செய்வதினால் நாம் அனைவரும் சுலபமாக இந்த மரண தொற்றுண்ணியின் பரவலை வெகுவாக குறைத்து உதவிட முடியும்.
தயவுசெய்து நீங்கள் வீட்டில் இருக்கும் தருவாயில் மும்முரமாக இருக்கப் பழகுங்கள். ஆக்கத்திறன் உடையவர்களாகவும், ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், பிறருடன் அன்பாகவும், இந்த கஸ்டமான காலக்கட்டத்தில் குடும்பத்தினர் உறவினர் அயலவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் உதவியாகவும் இருங்கள்.
நான் அனைவரையும் கேட்டுக்கொள்வது என்னவெனில், நீங்கள் ஒன்றிற்கும் பயப்படாது, அமைதியாக இருந்து, உங்களுக்கும் பிறருக்கும் நடுவே நல்லதோர் இடைவெளி எடுத்து, அதிகாரிகள் மூலமாக உங்களுக்கு கூறப்பட்ட ஆலோசனைகளையும், உத்தரவையும் மதித்து நடவுங்கள்.
இந்த COVID-19 பீதியினால் மக்கள் தவறாக போகும்விதமாக பல தரப்பட்ட பிழையான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவுகின்றன. அதனால் தயவு செய்து எல்லாவற்றையும் அப்படியே நம்பாது, அரசாங்க அதிகாரிகளின் அறிக்கைகளையும், உங்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளையும் கேட்டு நடவுங்கள்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த இடுக்கமான காலத்தை மேற்கொள்வோம். நமக்கு நல்லதோர் பிரகாசமான வருங்காலம் உண்டு என்னும் நம்பிக்கையை உறுதியாக வைத்திருங்கள்.
நான் இத்தருணத்தில் இந்த கடினமான காலக்கட்டத்தில் முப்படைகளாலும், காவல்துறைகளாலும் செய்யப்பட்ட சேவைகளை எண்ணி அவர்களை பாராட்டுகின்றேன்.
நான் மேலுமாக அனைத்து மருத்துவர்களையும், செவிலியர்கள், துணை மருத்துவர்களும் மற்றும் அனைத்து மருத்துவ தொழில் வல்லுநர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முடிவாக, நாம் அனைவரும் கட்டாயமாக ஒன்றினைந்து இந்த COVID-19ஐ வெற்றி காண்பதற்கு நமக்குள் ஒற்றுமை இருக்வேண்டும் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இதை நாம் சீக்கிரம் மேற்கொள்வோம் என உறுதியாக நம்புகின்றேன்.
நான் உங்கள் மத்தியில் இல்லாதிருந்தும் என்னுடைய பிராத்தனைகளும், நினைவுகளும் இன்றும் எப்பொழுதும் உங்கள் மீதே இருக்கும்.
உங்கள் அனைவருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
Rajadhani Nilayam
The Netherlands