News
யாழ்ப்பாண காவல் துறையிடம் புகார்.
Thursday 4 June 2020
ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්රවර්තී රාජවංශය
Arya Cakravartti Dynasty
இவர்களுக்கு: யாழ்ப்பாண தலைமையக ஆய்வாளர் (HQI), திரு B. C. பிரசாத் பெர்னாண்டோ, யாழ்ப்பாணத்தின் செயல் அலுவலர் (OIC) திரு ஜயந்த.
தொன்மையான அரண்மனை வளாகத்தில் சில நபர்கள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வசிக்கின்றனர் என்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. "மந்திரிமனை" என்று அழைக்கப்படும் இந்த கட்டிடமானது அரச அரண்மனை வளாகத்தின் ஒரு பாரம்பரிய தளம் மற்றும் எஞ்சியிருக்கும் பகுதியாகும், இது யாழ்ப்பாணத்தின் நல்லூரில் உள்ள பருத்தித்துறை சாலையில் அமைந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக, யாழ்ப்பாண தொல்பொருள் துறையின் செயல் உதவி இயக்குனர் திரு. நலின் வீரரத்தன அவர்களை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை, எனவே தயவுசெய்து அரண்மனை வளாகத்தில் தற்போது சட்டவிரோதமாக தங்கியுள்ள மக்களை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க உங்களை கேட்டுக் கொள்கின்றேன். மேலும் முடிந்தால் அரண்மனை கட்டிடத்தையும் அதன் வளாகத்தையும் முத்திரையிட்டு, அரண்மனை பகுதிக்குள் யாரும் நுழையாத வண்ணம் தடை செய்வீர்களாகில் நலமாக இருக்கும்.
உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவோ அல்லது எனக்கு மின்னஞ்சல் அனுப்பவோ தயங்க வேண்டாம்.
நன்றி,
இக்கனம்,
ராஜா ரெமிஜியஸ் கனகராஜா
(யாழ்ப்பாணத்து மகாராஜா)