News
ராஜதானி நிலையத்திலிருந்து செய்தி வெளியீடு
Thursday 25 June 2020
ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්රවර්තී රාජවංශය
Arya Cakravartti Dynasty
PRESS RELEASE
இரண்டாம் சங்கிலியன் மன்னரின் சிலைக்கு தற்போதைய முதல்வர் மாலை அறிவிப்பதற்கு மாநகர சபைக்குரிய வாகனத்தை பயன்படுத்தியதோடு மட்டுமல்லாது ஏணியினை சிலை மீதே வைத்து அதன் மீது ஏறி மாலை அணிவித்துள்ளார். இச் செயல் மன்னன் மீதே ஏறி மாலை அணிவிப்பதற்கு ஒப்பான செயல் ஆகும். 1974 இல் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்து வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாகவும், செழித்தோங்கிய யாழ்ப்பாணத்து ராஜ்ஜியத்தை பிரதிபலிக்கும் இச் சிலையினை 2011 ஆம் ஆண்டில் புணரமைத்து நிர்மாணிப்பதற்காக காலஞ்சென்ற எனது அரச குருக்கள் ஶ்ரீ க. வைத்தீஸ்வரன் குருக்கள், தற்போதைய எனது அரச குருக்களான ஶ்ரீ க. குருசாமி சர்மா குருக்கள் மற்றும் குடும்பத்தினர், அக்காலக்கட்டத்தில் யாழ்ப்பாண நகர முதல்வராக செயற்பட்ட திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, அமைச்சராக இருந்து செயற்பட்ட திரு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பட்ட கஸ்ரங்கள் யாவரும் அறிந்ததே. இவ்வாறான பாதுகாக்கப் படவேண்டிய வரலாற்றுச் சிலையின் மீது இரும்பு ஏணிகள் வைத்து, அதன் மேல் இருவர் நின்று, இவ்வாறாக அந்த சிலையை சேதப்படுத்தி மாலை அணிவிப்பது ஒரு தகுந்த மரியாதையா? நமது வரலாற்று ஆவணங்களை நாமே சேதப்படுத்தி அழிப்பது நமக்கு ஏற்கக்கூடியதான காரியங்களா? தற்போதய முதல்வரின் இந்த செயலை ஊடகங்கள் கண்டுக்காமல் ஏன் இருக்கிறது?
Rajadhani Nilayam
The Netherlands