News
ராஜதானி நிலையத்திலிருந்து - இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2020
Monday 3 August 2020
ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්රවර්තී රාජවංශය
Arya Cakravartti Dynasty
THE FOLLOWING STATEMENT IS ISSUED BY
HRH RAJA REMIGIUS KANAGARAJAH OF JAFFNA
அனைத்து அரசியல் தரப்பிற்கும் மதிப்பளித்து, 2020 ஆகஸ்ட் 5 ஆம் தேதி, பாராளுமன்றத் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமான முறையிலும் நடத்தப்படும் என்று நம்புகிறேன். இலங்கையின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு; உங்கள் ஒற்றை வாக்கானது சரியான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க உதவுகின்றது. வாக்களிக்கும் உரிமை உள்ள அனைவரும் தங்கள் முழு சுதந்திர சுயவிருப்பத்துடன் வாக்களிக்க வேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் தங்களுக்கு அதிக வாக்குகளை பெறுவதற்காக பொதுமக்களுக்கு தங்கள் பிரச்சாரத்தின் போது பல வாக்குறுதிகளை அளிக்கின்றனர். மக்களும் தங்கள் வாக்குகள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள்; எனவே ஒரு நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க உங்கள் வாக்குகள் மிகவும் அவசியமானதுடன், சரியான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு உங்கள் மதிப்புமிக்க வாக்குகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதும் உங்கள் பொறுப்பாகும்.
ஒரு அரசியல்வாதி பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்படுகிறார், அவர்கள் மக்களுக்கும் சமூகத்திற்கும் செய்யவேண்டிய தங்கள் பொறுப்புகள் யாவை என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அரசியல்வாதிகள் வழக்கமாக தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை மீறுகிறார்கள். எவ்வாறாயினும், எந்தவொரு அரசியல்வாதியும் தங்கள் பிரச்சார வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் நிச்சயமாக அதற்கு அவர்கள் பதில் சொல்லவேண்டும்.
எனது செய்திகளில் நான் முன்னர் குறிப்பிட்டது போல, அனைத்து இலங்கை தமிழ் மக்கள் அனைவரும் தங்கள் பலதரப்பட்ட கோட்பாடுகளினால் வெவ்வேறு திசைகளில் செல்வதை தவிர்த்து, உங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து ஒற்றுமையாகவும், உங்கள் இலக்குகளை அடைய ஒன்றிணைந்து செயல்படவும் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து உங்கள் அகங்காரங்களை ஒதுக்கி வையுங்கள், இல்லையென்றால் நீங்கள் அதிகமான நல்ல வாய்ப்புகளை இழந்துபோவீர்கள்.
இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க நான் இந்த தருணத்தை பயன்படுத்த விரும்புகிறேன்.
கடவுள் உங்களை அனைவரையும் ஆசிர்வதிப்பாராக,
கடவுள் நம் இலங்கை நாட்டை ஆசீர்வதிப்பாராக!
Rajadhani Nilayam
The Netherlands
External Links:
https://www.tamilwin.com/special/01/252666?ref=home-feed
https://adimudi.com/archives/47887
http://jaffnaboys.com/2020/08/04/16615/