News
ராஜதானி நிலையத்திலிருந்து செய்தி வெளியீடு
Saturday 5 September 2020
ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්රවර්තී රාජවංශය
Arya Cakravartti Dynasty
PRESS RELEASE
துரதிர்ஷ்டவசமாக, சிலர் நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்க முயற்சித்து, கடினமாகச் சம்பாதித்த நாட்டின் அமைதியைக் குலைக்க முயற்சிக்கின்றனர்.
துவேசயுரை, இனவாதம் என இவ்வகையான வன்முறைச் செயல்களை நாடு முழுவதும் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். எனவே, இலங்கை அரசாங்கமானது இத்தகைய துவேசயுரை, இனவெறிக்கு எதிராக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும், மேலும் சமூக ஊடக நிறுவனங்கள் துவேசயுரை, தவறான செய்திகள் மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை கண்டிப்பான முறையில் அகற்றவேண்டி ஊடக நிறுவனங்கள் மீது அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நான் முன்பு குறிப்பிட்டது போல, இலங்கைத் தீவில் எங்களிடம் வெவ்வேறு மொழிகள், இனம், மதங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் உள்ள மக்கள் உள்ளனர் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இலங்கை மக்கள் அனைவரும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும், இதனால் எல்லோரும் உண்மையான சமமான பன்முக கலாச்சார சமுதாயத்தில் ஒன்றினைந்து வாழ முடியும்.
Rajadhani Nilayam
The Netherlands