News
யாழ் இரண்டாம் சங்கிலி செகராசசேகரன் மன்னனை களங்கப்படுத்திய வீரமாகாளியம்மன் குருக்கள்
Sunday 20 September 2020
ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්රවර්තී රාජවංශය
Arya Cakravartti Dynasty
PRESS RELEASE
யாழ்ப்பாண அரசர்களான ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் தலைநகராக விளங்கிய நகர்களாக சிங்கை நகர், நல்லூர் என்பவைகளில், இராஜதானியாகத் திகழ்ந்த நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு அக்காலத்து நகர அமைப்புகளுக்கினங்க வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு போன்ற திசைகளால் உருவான சதுர வடிவான இராஜதானியாகும். யாழ்ப்பாண வரலாற்று நூல்கள், போர்த்துக்கீசரின் குறிப்புகள் போன்றவற்றில் நல்லூர் நகர் பற்றிய தகவல்கள் ஆங்காங்கு தெளிவாகக் காணப்படுகின்றன.
நல்லூர் ராஜதானியின் மேற்குத் திசையில் போர் வீரர்களின் இருப்பிட பகுதியில் இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. அரசர் போர்களுக்குச் செல்வதற்கு முன்பதாக அங்கு தமது வாளுடன் சென்று கோவிலில் பூஜை செய்து பின்பதாக போருக்குச் செல்வது அரச வழக்கமாகும்!
யாழ்ப்பாண வீரமாகாளியம்மன் கோவில் சரித்திரத்திலும், யாழ்ப்பாண அரச வரலாற்றிலும் இடம் பெறுகின்ற முக்கிய கோவில்களில் ஒன்றாகும். இப்படியிருக்க, வீரமாகாளியம்மன் கோவில் பிரதான குருக்கள் கமல் ஐயரினால் நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் ஈசான பாகத்தில் அமையபற்ற சிங்காரவேலவன் சிவகாயத்திரி அம்பாள் சுந்தர சுவர்க்கவாயில் சந்நிதானத்தில் யாழ் மன்னர் இரண்டாம் சங்கிலியனின் செகராசசேகரன் திருவுருவச் சிலை ஸ்தாபிக்க பட்டுள்ளமை எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தமிழ் அரச பாரம்பரியங்களின் படியாக ஒரு அரசனை மண்டியிட்டு சிலை அமைப்பது அநாகரிகமாகும். “வீழ்ந்துவிடாத வீரம், மண்டியிடாத மானம், தாழ்ந்திடாத தரம்” என யாழ் மன்னர்களுக்கென ஒரு தனித்துவம் இருந்தது. அரச சிலையானது அரசனின் பெயரையும் புகழையும் எடுத்து கூறுவதால் அதை அமைப்பதற்கென ஒரு பாரம்பரிய முறை உள்ளது.
மேலும் அரசனை மண்டியிட்ட சிலை செய்து அரச பாரம்பரியத்தை கொச்சப்படுத்தினது மட்டுமல்லாது, அச் சிலைக்கு முன்பாக ஒரு ஊண்டியலையும் வைத்து மேலுமாக யாழ் வரலாற்று போற்றும் அரசனை அவமதித்துள்ளார் கமல் ஐயர். யாழ் மன்னன் சிலையை செய்து அதன் மூலமாக பணம் சம்பாதிக்க எடுத்திருக்கும் இந்த செயலானது வரலாற்று போற்றும் யாழ் வீரமாகாளியம்மன் கோவிலின் சிறப்பபை மீண்டுமாக மட்டுப்படுத்தியுள்ளது.
ஐயரின் இத்தகைய புத்தியில்லாதச் செயலை நான் வன்மையாக கண்டிப்பதுடன், இதை சீக்கிரமாக சரிசெய்யுமாறு நான் கட்டளையிடுகின்றேன்! தமிழராகிய நாமே நமது தமிழர் மரபுகளை மீறி நமது வரலாற்றுச் சிறப்புகளை கொச்சைப்படுத்துவது மிகவும் கவலைக்குறிய செயலாகும். யாழ்ப்பாண அரசர்களின் பெருமைகளை எடுத்து சொல்வதென்ற அவசர செயல்களினால், சற்று சரித்திரங்களையும், அரச மரபுகளையும் நிதானித்து சிந்திக்காது, மதியீனமாக யாழ் மன்னர்கள் சிறப்பை இழுக்காக்குவது மிகவும் கண்டனத்துக்குறிய காரியமாகும்!
Rajadhani Nilayam
The Netherlands