News
யாழ்ப்பாணத்து இளவரசியின் 339 ஆவது ஆண்டு நினைவஞ்சலி.
Saturday 10 April 2021
ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්රවර්තී රාජවංශය
Arya Cakravartti Dynasty
PRESS RELEASE
யாழ்ப்பாணத்து அரசக் குடும்பத்து வரலாற்றில் மறைக்கப்பட்ட மறைந்த யாழ்ப்பாணத்து இளவரசியின் 339 ஆவது ஆண்டு நினைவஞ்சலி.
09 ஏப்ரல் 2021 அன்று, மறைந்த யாழ்ப்பாணத்து இளவரசியின் 339 வது மரண தினமாகும். இந்தியா பழைய கோவாவில் அமைந்துள்ள குழந்தை இயேசு பெருங்கோவிலில் (Basilica of Bom Jesus) மறைந்த இளவரசி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நினைவுத் திருப்பலி வழங்கப்பட்டது; ஆங்கிலத்தில் இத் திருப்பலி காலை 06:00 மணிக்கு நடைபெற்றது.
1591 இல் இருந்து 1615 வரை வாழ்ந்த யாழ்ப்பாணத்து சிங்கை ஆரியச்சக்ரவத்தி எதிர்மன்ன சிங்கம் பண்டாரம் பரராஜசேகரனின் மகளான இந்த யாழ்ப்பாணத்து இளவரசி கிறிஸ்தவம் ஏற்று ஞானஸ்நானம் பெற்று பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1637 டிசம்பர் 17 அன்று டோனா மரியா டா விசிட்டாகோ (Rev. Sister Maria da Visitacao) என்னும் பெயரில் இலங்கையின் முதற் கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஆனார். 01ஆம் ஜனவரி 1682 அன்று அருட்சகோதரியான யாழ்ப்பாணத்து இளவரசி மரியா டா விசிட்டாகோ கோவாவில் உள்ள புனித மோனிகா கான்வென்ட்டின் முப்பத்தி மூன்றாவது பிரதான வண. அருட்சகோதரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், அவர் இந்த பதவியில் மிக நீண்ட காலம் வகிக்கவில்லை, இளவரசியானவர் 09 ஏப்ரல் 1682 இல் காலஞ்சென்றார். கோவாவில் அவரது மரணத்தினத்தை முன்னிட்டு செய்யப்பட்ட திருப்பலிக்குப் பின்பு அங்கு யாழ்ப்பாணத்தின் இளவரசியின் நினைவாக இனிப்பு பண்டங்களும் மக்களுக்கு வளங்கப்பட்டது.
Rajadhani Nilayam
The Netherlands
External Link
https://m.youtube.com/watch?v=Zh9PMVTqWUs