News
மாப்பாண முதலியார் குடும்பத்திற்கு அனுப்பப்பட்ட இரங்கல் செய்தி (யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில்)
Tuesday 12 October 2021
ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්රවර්තී රාජවංශය
Arya Cakravartti Dynasty
திருவள்ளுவர் ஆண்டு 2052
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் அவர்களின் இறப்புச் செய்தி நம்மனைவருக்கும் ஈடு செய்யமுடியாத இழப்பாகும்.
யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாகவும், கூழங்கைத் தம்பிரான் பாடிய நல்லைக் கலிவெண்பா, இருபாலைச் சேனாதிராச முதலியாரின் நல்லை வெண்பா, நல்லையந்தாதி, நல்லைக் குறவஞ்சி, நல்லை நகர்க் கந்தன் பேரில் திருவூஞ்சல், திருநல்லூர்த் திருப்பள்ளியெழுச்சி, உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் நல்லை கந்தசுவாமி விஞ்சதி, நல்லை சரவணமுத்துப் புலவரின் நல்லை வேலவருலா, ஆறுமுக நாவலரின் தனி நிலைச் செய்யுள் என பல பாடல்களும், தேவாரங்களும், வேண்பாக்களும், செய்யுள்களும் பாடப்பட்ட இலங்கை யாழ்ப்பாணத்து புகழ் பெற்ற கோவிலின் தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் அவர்கள் 15.12.1964 முதல் 09.10.2021வரையிலும் பணியாற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது!
குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், ஆலய நிர்வாகத்தினருக்கும், குருக்களுக்கும் எனதும் எனது குடும்பத்தின் சார்பாகவும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதோடு, குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் அவர்களின் ஆத்மா திருவருள் பொருந்திய தெய்வயானையுடனும், வள்ளியம்மனுடனும் சேர்ந்திருக்கின்ற சுப்பிரமணியரின் திருவடிகளில் சாந்தியடைய எனது பிராத்தனைகள்!
இங்ஙனம்,
Sgd/. ராஜா ரெமிஜியஸ் கனகராரா