அரச கொடி
அரச கொடி
யாழ்ப்பாண அரசர்களான, ஆரியச்சக்கரவர்த்திகளின் அரச கொடியானது 13ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இவ் அரச கொடியானது 2005 ஆம் ஆண்டு மறுபடியும் மீளமைப்பு (மீண்டும் மறுவடிவமைப்புச்) செய்யப்பட்டது. வரலாற்றுக் கூற்றின்படி நந்திக் கொடியானது ஸ்ரீ இராமனால் வழங்கப்பட்டதாகும்.
அரச கொடியின் நடுவே இடது பக்கத்தை நோக்கியவாறு அமர்ந்த நிலையில் வெற்றி வாகை சூடிய நந்தியின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதுடன் அதன் வலதுபுற முன்னங்கால் உயர்த்தபட்டுக் காணப்படும். இந் நந்தியானது விசாலமான தாடையைக் கொண்டிருப்பதோடு சீவப்படாத இரண்டு கறுப்பு நிற கொம்புகளையும் கொண்டுள்ளது. நந்தியின் உருவம் ஆழ்ந்த சிவப்பு நிறத்தினால் (Magenta) எல்லைக் கோடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் அதன் கழுத்து தங்க மணி கோர்க்கப்பட்ட தங்கச் சங்கிலியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நந்திக்கு மேலாக செம்பிறையும் சூரியனும் குங்கும சிவப்பு (Saffron) நிற பின்னணியில் காணப்படுகிறது.
வெற்றி வாகை சூடிய நந்திக் கொடியானது யாழ்ப்பாண இராச்சியத்தின் பெருமைக்குரிய சின்னமாகும். இன்று இவ் அரச கொடியானது பறப்பதனை காணும்போது நம் பண்பாடு, கலாச்சாரங்கள் நிறைந்த இராஜ்ஜியத்தின் பெருமையை மனதிற்கொண்டு அக்கொடியுடன் நாமும் பறக்க முடியும்.
அரச கொடியானது வரலாற்று பேராசிரியர்களான Dr. சிவசுப்பிரமணியம் பத்மநாதன், B.A. (Hons), Ph.D. (Jaffna), மற்றும் Dr. சமாதிலிங்கம் சத்தியசீலன், B.A. (Hons), M.A. Ph.D. (Jaffna) ஆகியோரின் ஆலோசனைகளுடன் உருவாக்கப்பட்டது.
அரச கொடி பிரபுக்களின் உயர் சபையில் அங்கம்வகிக்கும் (Hoge Raad van Adel – The High Council of Nobility), அணிகலக் கலைஞர் (Heraldic Artist 1986-2015) Ing. C. Q. C. M. Walschots என்பவரால் வரையப்பட்டது.
THE OFFICIAL ANNOUNCEMENT - 24 JUNE 2015
அரசரின் தனிப்பட்ட கொடி
யாழ்ப்பாணத்து மகாராஜாவின் இக் தனிப்பட்ட கொடியானது 2005ஆம் ஆண்டு மீளமைப்பு செய்யப்பட்டு அரச கொடியை காட்டிலும் சற்று மாறுபட்டதாகவும் உள்ளது. சைவ மத புராதணங்களின் படி வியாழக்கிழமையின் நிறம் மஞ்சல் ஆகும். அத்தோடு மகாராஜாஅவர்கள் பிறந்த நாளும் வியாழக்கிழமை என்பதனாலும் அவரது அதிஸ்ட நிறமாகவும் இது உள்ளது. பழுப்பு சிவப்பு (Maroon) நிற எல்லைக்கோடு கொண்ட இக் கொடியின் மையத்தில் இராஜ அணிகலமானது வைக்கப்பட்டு தங்க மஞ்சல் நிற பின்னணியில் உள்ளது. யாழ்ப்பாணத்து மகாராஜாவின் தனிப்பட்ட கொடியானது அவருக்கு மட்டுமே சொந்தமானதோடு அவரைத் தவிர வேறு எவரேனும் இதனைப் பயன்படுத்த இயலாது.
அரசரின் தனிப்பட்ட கொடியானது பிரபுக்களின் உயர் சபையில் அங்கம்வகிக்கும் (Hoge Raad van Adel - The High Council of Nobility), அணிகலக் கலைஞர் (Heraldic Artist 1986-2015) Ing. C. Q. C. M. Walschots என்பவரால் வரையப்பட்டது.
THE OFFICIAL ANNOUNCEMENT - 02 JUNE 2016
அரச கொடியினதும் அரசவைக்கு உரித்தான கொடியினதும் பதிப்புரிமைகள் தொடர்பாக
அரச கொடியானது அரச குடும்பத்தின் தலைமையகத்திற்கும், மற்றுமாக அரச குடும்பத்து உறுப்பினருக்கும் சொந்தமானதாகும். அரசவைக்கு உரித்தான கொடியானது மகாராஜாவினால் பாவனைக்கு உட்படுத்தப்படும். யாழ்ப்பாண அரசவையின் அனுமதியின்றி இவ் இராஜ கொடியினையோ அதன் சின்னங்களையோ மறுபதிப்பு செய்யக்கூடாது. இவற்றினை எவ்வித தவறான முறையிலும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் பதிப்புரிமை விதிமுறை மீறும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ் அரச கொடியை அரசவையின் அனுமதியுடன் மாத்திரமே பயன்படுத்தவோஇ வெளியிடவோ முடியும்.
எவராகிலும் இவ் அரச கொடியை வெளியிடவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதி கோருவதற்கு எங்களை தொடர்புகொள்ளவும்.